புதுச்சேரி மார்ச் 29- புதுச்சேரி மாஹே பிரதேசத்தில் 68 வயது மூதாட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாடு களுக்கு சென்று திரும்பினார். அப்போது அவருக்கு சளி, இருமல் மூச்சு திணறலுடன் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தன. இதைத்தடர்ந்து அவர் மாஹே அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது உமிழ்நீர் பரிசோத னைக்குட்படுத்தப்பட்டதில் கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சை காரண மாக அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதன்பின் அவருக்கு இரண்டு முறை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளதா என்று சோதனை நடத்தப்பட்டது. சோதனை யில் அவர் கொரோனா வைரஸ் தொற்று தாக்கு தலிலிருந்து விடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.இதைத்தொடர்ந்து அந்த மூதாட்டி மாகி அரசு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார்.