tamilnadu

img

உயிரைக் கொடுத்தாலும் உதிரச்செங்கொடி காப்போம்

சின்னியம்பாளையம் தியாகிகள் ஜோதி பயணத்தில் எழுச்சி முழக்கம்

கோவை, ஜன.18– உழைப்பவர் உரிமை காக்க உயிரை கொடுத்தாலும் உதிரச்செங் கொடியை தாழவிடோம் என்கிற உணர்ச்சிமிகு முழக்கத்துடன் கோவை சின்னியம்பாளையம் தியாகி கள் ஜோதிப் பயணம் புறப்பட்டது. இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) அகில இந்திய மாநாடு வரு கிற ஜன.23- 27 ஆம் தேதி வரை சென் னையில் நடைபெறுகிறது. இம் மாநாட்டில் உழைப்பாளி மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் உயிர் நீத்த செங்கொடி தியாகிகளின் நினைவு ஜோதி ஏற்றப்படவுள்ளது. தமிழ கத்தின் 7 முனைகளில் இருந்து சென்னை மாநாட்டு அரங்கிற்கு செல்லும் ஜோதி பயணத்தின் ஒரு பகுதியாக கோவை சின்னியம்பாளையம் தியாகிகள் ஜோதி பயணம் சனிக்கிழமையன்று தியாகிகள் மேடையில் இருந்து புறப் பட்டது. 

சிஐடியு மாவட்டத் தலைவர் சி. பத்மநாபன் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் தியாகிகள் ஜோதியை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் எடுத்துக் கொடுக்க சிஐடியு மாநி லச் செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி பெற்றுக் கொண்டார். அவ ரது தலைமையில் ஜோதி பயணம் துவங்கியது. இந்நிகழ்ச்சியில் சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் ரங்க ராஜ், சிஐடியு கோவை மாவட்டப் பொருளாளர் ஆர்.வேலுசாமி உள் ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றார். அப்போது உயிரை கொடுத்தாலும் உதிரச்செங்கொடி யை காப்போம் என்ற எழுச்சிமிகு முழக்கங்களை எழுப்பி தியாகிகள் ஜோதி பயணத்தை துவக்கினர். இந்த ஜோதி பயணம் சிஐடியு அகில இந்திய மாநாட்டின் நோக்கங் கள் குறித்து கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் மத்தி யில் பிரச்சாரம் மேற்கொண்டு ஞாயி றன்று உதகை மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் வழியாக மாநாடு நடை பெறும் சென்னைக்கு கொண்டு செல்லப் பட இருக்கின்றது.

;