tamilnadu

img

குற்றச்செயலைத் தடுக்க என்கவுண்டர் தீர்வாகாது

சு.திருநாவுக்கரசு எம்பி கருத்து

புதுக்கோட்டை, டிச.7- நாட்டில் நிலவும் குற்றச் செயல்க ளைத் தடுப்பதற்கு என்கவுண்டர் தீர்வா காது என்றார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் சு.திருநா வுக்கரசர் எம்பி. புதுக்கோட்டையில் சனிக்கிழமையன்று செய்தியாளர்க ளுக்கு அவர் அளித்த பேட்டி: உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவதோடு, மறைமுகத் தேர்தலை ரத்து செய்து விட்டு நேரடித் தேர்தலை நடத்த வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் திமுக வுடன் கூட்டணி குறித்துப் காங்கிரஸ் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.

குற்றச் செயல்களைச் செய்தவர்க ளுக்கு என்கவுண்டர் தீர்வாகாது. அவர் கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு முறை யாக தண்டனை வழங்க  வேண்டும். கடந்த காலங்களில் வெங்காய விலை ஏற்றத்தினால் அரசுகள் கவிழ்ந்த வர லாறு இந்தியாவில் உள்ளது. மத்திய அரசு வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மத்திய, மாநில அரசு ஊழியர்களை கட்டாய ஓய்வு கொடுக்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது நடைமுறை க்கு ஒத்துவராத தவறான செயலாகும். இதனால் அரசு ஊழியர்களின் வாழ்வா தாரம் பாதிக்கப்படும். வேலை வாய்ப்பை கூடுதலாக உருவாக வேண்டுமே தவிர இருப்பவர்களை பாதியிலேயே வீட்டுக்கு அனுப்புவது சரி அல்ல. இவ்வாறு திருநாவுக்கரசர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
 

;