tamilnadu

தருமபுரி , சேலம் முக்கிய செய்திகள்

கிருஷ்ணாபுரத்தில் சிசிடிவி கேமரா பொருத்தம்

தருமபுரி, செப்.4- தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரத்தில் சிசிடிவி கேமரா  பொருத்தம் பணி நடைபெற்றது.  தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் காவல் நிலையத் துக்குள்பட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள்  பொருத்தப் பட்டன. கிருஷ்ணாபுரம் பகுதி வணிகர்கள் மற்றும் பொது மக்கள் பங்களிப்புடன் 10 சிசிடிவி கேமராக்கள் கொள் முதல் செய்யப்பட்டன. இக்கேமராக்களின் இயக்கத்தை  மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப.ராஜன் தொடங்கி வைத்தார். நாய்க்கன் கொட்டாயில் உள்ள  நக்ஸல்கள் நினைவிடம் மற்றும் பேருந்து நிறுத்தம், கிருஷ்ணாபுரம், திப்பம்பட்டி சந்திப்பு சாலை என 10 முக்கிய இடங்களில் இக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இவற்றின் இணைப்பு அந்தப் பகுதியில் கணினி  மற்றும் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர்  ஆகியோரது செல்லிடப்பேசிகளுக்கு அளிக்கப் பட்டுள்ளது. கேமராக்களின் உதவியுடன் திருட்டு, வழிப் பறி, வாகன விபத்துகள் மற்றும் இதர குற்றச் செயல்களை கண்காணித்து நடவடிக்கைகள் மேற்கொள்ள இயலும் என காவல்துறையினர் தெரிவித்தனர். இதில், காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜ்குமார், காவல் ஆய்வாளர் ராஜ சோமசுந்தரம், காவலர்கள் கலந்துகொண்டனர். 

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு ஐஎஸ்ஓ தரச்சான்று

சேலம், செப்.4- சேலம் ரயில்வே கோட்டத்திற்கு ஐஎஸ்ஓ தரச்சான்று கிடைத் துள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்திற் குட்பட்ட சேலம், கரூர், ஈரோடு,  திருப்பூர் மற்றும் மேட்டுப் பாளையம் உள்ளிட்ட ரயில் நிலை யங்களுக்கு  (சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம்) ஐஎஸ்ஓ தர சான்றிதழ் பெற்றுள்ளது. தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சேலம் ரயில்வே கோட்டத்தில், ரயில்வே வாரியத்தால் அடை யாளம் காணப்பட்ட ஏ 1 மற்றும் ஏ  அந்தஸ்து பெற்றுள்ள ரயில் நிலை யங்கள் அனைத்தும்  ஐஎஸ்ஓ  தரச் சான்றிதழ் பெற்றிருப்பது வேறு எந்த கோட்ட அலுவலகமும் பெறாத சிறப்பம்சமாகும். சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ், கூடுதல்  கோட்ட மேலாளர் ஏ.அண்ணா துரை ஆகியோர் முதுநிலை வணிக மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன் மற்றும் முதுநிலை இயந்திரவியல் பொறியாளர் எஸ்.முகுந்தன் ஆகி யோரின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர். அதேபோல ஐஎஸ்ஓ தரச் சான்று பெற உழைத்த உதவி வணிக  மேலாளர் மாயா பீதாம்பரம் (சேலம்), உதவி சுகாதார அலு வலர் குமார் (கரூர் மற்றும் மேட்டுப் பாளையம்), கோட்ட சுகாதார நல அலுவலர் கும்பாரே (திருப்பூர்), ரயில் பெட்டி பணிமனை அலுவலர் தினேஷ் (ஈரோடு) ஆகியோர் அந்தந்த ரயில் நிலையங்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின்  அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் களாக செயல்பட்டனர். இதுதொடர்பாக,சேலம் கோட்ட மேலாளர் யு.சுப்பாராவ் செய்தியாளர்களிடம் கூறிய தாவது, தேசிய பசுமை தீர்ப்பா யத்தின் உத்தரவின்படி, ரயில்வே வாரியம் அந்தந்த மண்டல ரயில்வே  துறைகளுக்கு 24 வழிகாட்டுதல் களை பின்பற்றிட அறிவுறுத்தியது. அந்த வகையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்கள் முதல் கட்டமாக 36 ரயில் நிலையங் களில் பின்பற்றப்பட்டது. முதற் கட்டமாக சென்னை சென்ட்ரல், திருவனந்தபுரம், திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் அடையாளம் காணப்பட்டன. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 720 ரயில் நிலையங்கள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழி காட்டுதல்களை பின்பற்றிட நடவ டிக்கை எடுக்கப்பட்டது. அனைத்து  ஏ1 மற்றும் ஏ அந்தஸ்து பெற்ற  ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டன. அந்தவகையில் ரயில்வே வாரியத்தின் உத்தரவின் படி, சேலம் கோட்டத்திற்கு உட் பட்ட கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம் ஆகிய  ரயில் நிலையங்கள் தேசிய பசுமை தீர்ப்பாய வழிகாட்டுதல்களை பின்பற்றியது. இதில் 24 வழி காட்டுதல்களில் 14001:2015 சுற்றுச்சூழல் மேலாண்மை தரம் பெறுவது முதல்படியாகும்.  இந்நிலையில் கோவை ரயில்  நிலையம் ஏற்கெனவே ஒருங்கி ணைந்த மேலாண்மை திட்டத்தில்  ஐஎஸ்ஓ  தரச்சான்று பெற்றது. எனவே இதர 5 ரயில் நிலையங் களுக்கும் ஐஎஸ்ஓ தரச்சான்று பெற  நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த வகையில் குவெஸ்ட் சான்றிதழ் தர  நிறுவனம் மூலம் தணிக்கை மற்றும்  தரச்சான்றிதழ் ஆய்வு செய்யப் பட்டது. முதற்கட்ட ஆய்வின் முடிவில் சேலம், ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம் மற்றும் கரூர் ஆகிய ரயில் நிலையங்களுக்கு  (சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம்)  வழங்க குவெஸ்ட் நிறுவனம் தரச்சான்றிதழ் வழங்கியுள்ளது என தெரிவித்தார்.