உதகமண்டலம், ஜுன் 19- நீலகிரி மாவட்டம் கரிக்கையூர் பகுதியில், சிதைக்கப்பட்டுவரும் 5 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பாறை ஓவியங்களை தமிழக தொல்லி யல்துறையினர் நேரில் ஆய்வு செய்தனர்.
பாறை ஓவியம்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்துள்ள கரிக்கையூர் வனப் பகுதி யில், வரலாற்றுக்கு முற்பட்ட காலமாகக் கருதப்படும் மொழிகள் தோன்றாத காலத்தில் வாழ்ந்த ஆதி மனிதர்கள், தங்களின் வாழ்வியலை இயற்கையில் கிடைக்கும் பொருள்களைக்கொண்டு பாறைகளில் ஓவியங்களாக வரைந்துள் ளனர். இதில், அப்போதைய வாழ்க்கை முறை, உணவு, வேட்டை, போர், நடனம், சடங்குகள், இசைக்கருவிகள், வன விலங்குகள் என எல்லாவற்றையும் காட்சியாக வரைந்துள்ளனர்.
ஆய்வு
5 ஆயிரம் ஆண்டுகளாக வெயில், மழையில் எந்தப் பாதிப்பும் ஏற்படா மல் உள்ளன. ஆய்வாளர்கள் பலரும் இந்த மண்ணில் வாழ்ந்த ஆதி மனிதர்கள் குறித்த ஆய்வில் ஈடு பட்டுவருகிறார்கள். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளில் சமூக விரோதி கள் சிலராலும், அத்துமீறி உள்ளே செல்லும் சுற்றுலாப்பயணிகள் சிலரா லும் பழைமையான இந்தப் பாறை ஓவி யங்கள் சிதைக்கப்பட்டன. இதுகுறித்த செய்திகள் வெளியான நிலையில், மாவட்ட நிர்வாகமும் வனத்துறையும் இந்தப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, மக்கள் செல்ல தடை விதித்தது. தற்போது, பழைமை யான இந்த பறை ஓவியங்களின் நிலை குறித்து அறிய, தொல்லியல்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வுசெய்தனர். மேலும், சுண்ணாம்பு மற்றும் கரித்துண்டுகளைப் பயன்படுத்தி, சிதைக்கப்பட்டிருந்த இடங்களை வனத் துறையினர் உதவியுடன் சுத்தம்செய்த னர்.
பாறை ஓவியங்கள்
இதுகுறித்து தமிழக தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம், ``தென் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பாறை ஓவியமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கரிக்கையூர் பாறை ஓவியம் உள்ளது. 5 ஆயிரம் முதல் 2 ஆயிரம் ஆண்டுகள் வரை வாழ்ந்த மனிதர்கள் தொடர்ந்து வரைந்துள்ளனர். இந்த ஓவியங்களைப் பார்க்கையில், பல் வேறு காலங்கள் புலப்படுகின்றன. இந்திய மானுடவியல் வரலாற்றில், இந்த ஓவியம் முக்கியப் பங்கு வகிக் கிறது. சிலரால் இந்தப் பாறை ஓவி யங்கள் சில இடங்களில் சிதைக்கப் பட்டுள்ளன. அவற்றைச் சரிசெய்துவரு கிறோம். தொடர்ந்து, இந்த ஓவியங் களைப் பாதுகாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.