ரங்கல் சென்னை,நவ.12- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை வருமாறு:- இந்திய அதிகாரக் கட்டமைப்பில் இந்திய ஆட்சிப் பணித் துறையில் 1956ஆம் ஆண்டில் பணியாற்றி, ஓய்வுபெற்ற மூத்த அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன் காலமானார் என்ற துயரச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பி.எஸ்.கிருஷ்ணன் அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப் படையில் மனித உரிமைகளை குறிப்பாக பட்டியலின, பழங்குடியின மக்களின் உரிமை பாதுகாப்பு அரணாக செயல்பட்டவர். இவரது முன்முயற்சி யால் பட்டியலின, மக்க ளுக்கான தேசிய ஆணையம், பிற்படுத்தப்பட் டோர் நல தேசிய ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உரு வாக்கப்பட்டன.
தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் மண்டல குழு பரிந்துரைகள் அமலாக்கப்பட்டது. அந்த நேரத்தில் துறை யின் செயலாளராக இருந்து மிகச் சிறப்பாக செயல்பட்டவர். சமூக நீதிப் போராட்டத் தில் முன்வரிசையில் நின்ற பி.எஸ். கிருஷ்ணன் மறைவு பேரிழப்பாகும். அவரது படைப்புகளை ஆழ்ந்து கற்பதன்மூலம் சமூக நீதிப் போராட்டத்தை முன் னெடுப்பது அவசியமாகும். அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.