tamilnadu

img

பிரிவு 370 வளர்ச்சியை கெடுத்ததா? - க.சுவாமிநாதன்

இது உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் குற்றச்சாட்டு. அரசியல் சட்டப்பிரிவு 370 ஜம்மு - காஷ்மீர் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது என்பது அவர் கருத்து. பொருளாதார நிபுணர் பிரபாத் பட்நாயக் “மேக்ரோ ஸ்கேன்” இணையதளத்தில் எழுதிய கட்டுரை இதற்கான பதிலைத் தருகிறது. இக்கட்டுரையின் தகவல்களைத் தழுவிய தொகுப்பு இது.

காஷ்மீர் கிராமப்புற உழைப்பாளி மக்கள் பெரும் அடக்குமுறையை விடுதலைக்கு முந்தைய மன்னராட்சி காலங்களில் எதிர் கொண்டவர்கள். மகாராஜாவின் வரி வசூல் கடுமையாக இருக்கும். இதனால் கிராமப்புற விவசாயிகள், உழைப்பாளி மக்கள், (பெரும்பா லும் இஸ்லாமியர்கள்) கொடுமையான வறு மைக்குள்ளும், அறியாமைக்குள்ளும் ஆழ்த்தப் பட்டிருந்தனர். வரி கட்ட இயலாமல் திணறிய மக்களை மகாராஜாவின் வரி வசூல் சேவகர் கள் எப்படி சோதிப்பார்கள் என்பது குரூரமான கதை.  வரி கட்டாத கிராம மக்களின் வாயை திறக்கச் சொல்வார்களாம். பல்லில் அரிசி ஒட்டியிருக்கி றதா என்று பார்ப்பார்கள். அப்படி அரிசித் துகள் ஒட்டியிருந்தால் வரி கட்டுகிற சக்தி உள்ளவர் என்ற முடிவுக்கு அவர்கள் வருவார்களாம்

காஷ்மீர் வளர்ச்சி

இப்படி இருந்த காஷ்மீர் இன்று எவ்வளவு வளர்ச்சியை எட்டியிருக்கிறது பாருங்கள்! இது திட்ட கமிஷன் தந்த விவரங்கள். 2010 -இல் இந்தியாவிலேயே மிகக் குறைவான வறுமை விகிதத்தை கொண்ட மாநிலமாக ஜம்மு- காஷ்மீர் இருந்தது. கிராமப்புற வறுமை 8.1 சதவீதம். யூனியன் பிரதேசமான தில்லி மட்டுமே இதை விட குறைவான வறுமை விகிதத்தை (7.7 சதவீதம்) கொண்டிருந்தது. இந்திய கிராமப்புற வறுமை விகித சராசரியோ 33.8 சதவீதம். எவ்வ ளவு பெரிய இடைவெளி! மெட்ரோ சூழல் கொண்ட தில்லியை ஒப்பீட்டிற்கு எடுத்துக் கொள்வது பொருத்தம் அல்ல. ஆகவே ஜம்மு- காஷ்மீர் வறுமை ஒழிப்பு விகிதங்கள் ஆச்சரி யத்திற்குரியவை. இந்தியாவிலேயே சிறந்த வை. மோடியின் செல்ல மாநிலமான குஜராத் கூட ஜம்மு- காஷ்மீருக்கு பக்கத்தில் வர முடிய வில்லை. குஜராத்தின் வறுமை விகிதம் அதே  2010 ல் 26.7 சதவீதம். இதுவெல்லாம் அதிகாரப் பூர்வ புள்ளி விவரங்கள். அமித் ஷாவுக்கு எளிதில் கிடைக்கக் கூடியவை.  மகாராஜா காலத்திய கொடுமைகளின் தாக்கங்களை மீறி எப்படி கிராமப்புற வறுமை விகிதங்கள் காஷ்மீரில் வீழ்ச்சி அடைந்தன? இதில்தான் பிரிவு 370 ன் முக்கியத்துவம் அடங்கி யிருக்கிறது. அமித் ஷாவின் குற்றச் சாட்டோ தலை கீழானது. 

நிலம் கைவசம்

மன்னராட்சி காலத்தில் கொடூரமாக ஒடுக்கப் பட்ட மக்களுக்கு, எவ்வாறு நிலங்கள் கைவச மானது என்பது அறிய வேண்டிய வரலாறு.  இரண்டு வகையிலான நிலச் சீர்திருத்தங் கள் காஷ்மீரில் நடந்தேறின.  ஒன்று, உழுபவனுக்கே நிலம் சொந்தம் என  விவசாயிகளுக்கு, நிலப்பிரபுக்களிடம் இருந்த நிலம்  பறிக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டது. எவ்வளவு நிலத்தை உழுது பயிரிட்டார்களோ அவ்வளவு நிலம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு நிலப் பிரபுக்களுக்கு இழப்பீடு கூட வழங்கப்படவில்லை.  இரண்டாவது, 22 3/4 (இருபத்து இரண்டே முக்கால் ஏக்கர்) நில உச்சவரம்பு அறிவிக்கப் பட்டு உபரி நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இதற்கும் இழப்பீடு வழங்கப்படவில்லை. நிலம் பெற்றவர்களிடம் இருந்தும் ஏதும் வசூலிக் கப்படவில்லை.  இந்த நில சீர்திருத்தங்கள் முழுமையான நிவாரணத்தை தந்ததாக சொல்ல முடியாது. உழுத அளவிற்கு நிலமே கொடுக்கப்பட்டதால் அவை மிகக் குறைவான அளவிலானதாக பய னாளிகளுக்கு இருந்தது. உச்சவரம்பு உபரி நிலங்களில், வளம் குறைந்தவையும் இருந்த மையால் பெரிய பயனை அவற்றால் தர இய லாத நிலையும் இருந்தது. சீனா போன்று விவசா யச் சமூகத்தை இணைத்து நிலச் சீர்திருத்த அமலாக்கம் மேற்கொள்ளப்படவில்லை. அதிகார வர்க்கம் பொறுப்பேற்று செய்ததால் அது உணர்வுப் பூர்வமாக அமையவில்லை. என்றாலும் நிலச் சீர்திருத்தங்கள் மிக முக்கிய பொருளாதார நகர்வாக காஷ்மீர் கிரா மப்புற மக்களின் வாழ்வில் அமைந்தது. 

பிரிவு 370 ன் பின்பலம்

விடுதலை இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட நிலச் சீர்திருத்த சட்டமும், கடன் நிவாரண சட்ட மும் பிரிவு 370 ஐ பெரும் பின்பலமாகக் கொண்டிருந்தன என்பதே முக்கியமான அம்சம்.  ஜம்மு- காஷ்மீர் அரசியல் சாசனத்திற்கும், இந்திய அரசியல் சாசனத்திற்குமான முக்கிய மான வேறுபாடே இதைச் சாத்தியம் ஆக்கியது. ஜம்மு -காஷ்மீர் அரசியல் சாசனத்தில் “சொத்து ரிமை” வழங்கப்படவில்லை. ஆனால் இந்திய அரசியல் சாசனம் அதை வழங்கியிருந்தது. இத னால் தமிழ்நாடு, பீகார், உத்தரப்பிரதேசம் மாநி லங்களில்  கொண்டு வரப்பட்ட நிலச் சீர்திருத்த சட்டங்கள் உயர்நீதி மன்றத்தில் கேள்விக்கு ஆளாயின. அடிப்படை உரிமைகளை இச் சட்டங்கள் பறிக்கின்றன என்று நிலப் பிரபுக்கள் நீதிமன்றக் கதவுகளை தட்டினர். உயர்நீதி மன்றங்கள் அச் சட்டங்களுக்கு எதிரான தீர்ப்பு களை வழங்கின. ஜம்மு - காஷ்மீரின் நில உச்ச வரம்பு சட்டங்கள் பிரிவு 370 என்கிற கவ சத்தால் காப்பாற்றப்பட்டன.

கடைசி வரை காஷ்மீர்

உயர்நீதிமன்ற தீர்ப்புகளோடு சட்ட யுத்தம் முடிந்து விடவில்லை. உச்ச நீதிமன்றத்திற்கு பிரச்சனை எடுத்துச் செல்லப்பட்டது.  உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்குவதற்கு முன்னரே ஜவகர் லால் நேரு தலைமையிலான மத்திய அரசாங்கம் இம் மூன்று மாநில நில உச்ச வரம்பு சட்டங்களை நீதிமன்ற பரிசீலனை க்கு அப்பாற்பட்டதாக ஓர் அரசியல் சட்ட திருத்தம் மூலம் மாற்றியது. அதற்கான சட்டத்தை ஒன்ப தாவது அட்டவணையிலும் சேர்த்தது.  இருந்தாலும் நீதிமன்ற தலையீடு நிற்க வில்லை. இன்னொரு வழக்கில் (1954) சந்தை விலை இழப்பீடு இல்லாமல் எந்த தனி நபர் சொத்தையும் அரசு  எடுக்கக் கூடாது என்றது உச்ச நீதிமன்றம். மீண்டும் ஒரு அரசியல் சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அரசு கையகப்படுத்துகிற சொத்துக்களுக்கு முழு இழப்பீடு தர வேண்டியதில்லை என்கிற சட்டம் இது. இதுவும் 9 வது அட்டவணையில் இணைக்கப்பட்டு நீதிமன்ற தலையீடுகளில் இருந்து பாதுகாக்கப்பட்டது.  இருந்தாலும் ஜம்மு- காஷ்மீர் போல எடுப் பதற்கும் இழப்பீடு இல்லை; கொடுப்பதற்கும் விலை இல்லை என்கிற நிலை மற்ற மாநிலங்க ளில் வரவே இல்லை. அவர்கள் நில உடமையா ளர்க்கு இழப்பீடு தர வேண்டி இருந்தது. நிலத்தை உழுத விவசாயிகளும்  விலை கொடுத்து வாங்கு வது அல்லது குத்தகை விவசாயிகளாக தொடர்வது அல்லது அரசே நிலத்தை எடுத்துக் கொள்வது என்கிற வாய்ப்புகளில் ஒன்றையே பல மாநி லங்களில் தெரிவு செய்ய வேண்டியிருந்தது.

 முன்னுதாரணம்

கடைசி வரை காஷ்மீர் ஓர் முன்னுதாரண மாக திகழ்ந்தது. இந்தியாவில் வேறு எந்த மாநில மும் நில உறவுகளில் இவ்வளவு விரைவான மாற்றங்களை விடுதலை இந்தியாவில் கொண்டு வர முடியவில்லை.  1957 வரை கேரளா காத்திருந்தது. இடதுசாரி அரசாங்கங்கள் அமைந்த பின்னர்தான் நிலச் சீர்திருத்தங்கள் அரசியல் உறுதியோடு அமலா கிற அனுபவம் இந்தியாவிற்கு கிடைத்தது.  அது வரை காஷ்மீர் மட்டுமே நிலம் குறித்த தனித்து வம் மிக்க மாநிலமாக இருந்தது.  இது நில உறவுகளில், சமூக கட்டமைப் பின் மீதும் ஏற்படுத்திய மாற்றங்கள் முக்கிய மானவை. அதையும் கடந்து வருமான ஏற்றத் தாழ்வுகளை குறைப்பதிலும் இதன் தாக்கம் நீண்டது. அதன் பயனே மேற்கூறிய வறுமை ஒழிப்பில் அம் மாநிலம் கடந்த மைல் கற்கள்.  அமித் ஷா அவர்களே! ஆர்ட்டிகிள் 370 வளர்ச்சியை தடுத்தது என்பதற்கு என்ன ஆதா ரம்! எந்த ஆய்வும், எந்த தகவலும், எந்த அளவு கோலும் உங்கள் பக்கம் பேசவில்லையே!
 

;