இன்று ஊடகம், ஜனநாயகம் இரண்டும் பழைய விளக்கங்களால் சிறப்பித்துக் கூறமுடியாதபடி மாற்றத்திற்கு இலக்காகியுள்ளன. ஊடகத் திற்கு மிகச் சுருக்கமாக நான்கு வடிவங்கள் உள்ளன. அவை அச்சு ஊடகம், ஒலி ஊடகம், காட்சி ஊடகம், சமூக ஊடகம். அச்சு ஊடகம்கூட முன்னைப்போல் இன்று இல்லை. அச்சு ஊடகத்தை வாசிப்பவர்கள் அவர்கள் அச்சிடாமலேயே வாசிக்கிறார்கள். தொழில்நுட்பக் கல்வியின் வளர்ச்சி பழைய பாணிகளை முக்கியத்துவ மற்றதாக ஆக்கிவிட்டது. இண்டர்நெட் வருகையும், ஸ்மார்ட் ஃபோன்களின் பெருக்கமும் புதிய வடிவங்களை உருவாக்குவது மட்டுமல்ல, பழைய வடிவங்கள் அத்தனையையும் புத்தமைக்கவும் செய்கிறது. இன்று பத்திரிகை வாசகர்களில் அதிகமானோர் இ.பேப்பர் வாசிக்கிறார்கள். அவர்கள் அச்சுமை தோய்ந்த எழுத் துக்களைப் பார்க்காதவர்கள். அச்சு மையின், பேப்பரின் வாசனையை அனுபவிக்காதவர்கள். ஆனாலும், இவர்க ளையெல்லாம் கடந்து அச்சு ஊடகங்களின் பரப்பு விரிவாகிக் கொண்டுதான் இருக்கிறது.
வானொலி காலாவதியாகிவிட்டதெனக் கருதப்பட்ட ஊடகமாக இருந்தது. மார்க்கோனி கண்டுபிடித்த இந்தக் கருவி இல்லாமலேயே இன்று வானொலியை (ஒலி பரப்பை) யாரும் கேட்கமுடியும். மொபைல்கள் வானொ லியின் புதிய வடிவமாக வந்துள்ளன. வாகனங்களில் உள்ள வானொலிகள் எந்தச் சமயத்திலும் கேட்கத்தக்க ஊடகமாக வானொலியை மாற்றிஅமைத்தது. உலகெங்கும் புதிய வானொலி அலைவரிசைகள் வந்துள்ளன. எங்கி ருந்தும் வானொலி ஒலிபரப்பை இயக்கலாம். பொழுது போக்குக்காக மட்டும் லைசன்ஸ் கிடைத்த ரேடியோக்க ளும் இடையே தங்களது அரசியலைச் சாமர்த்தியமாகப் புகுத்திவிடுகின்றன. இன்டர்நெட் ரேடியோவின் வரு கையுடன் குறைந்த முதலீடு செய்து வானொலி நிலையங்கள் ஆரம்பிக்கிற நிலை தோன்றியுள்ளது. இதுவும் வானொலியின் பரப்பை வலுப்படுத்தியுள்ளது. காட்சி ஊடகத்தின் தன்மையும் இன்று மாறிவிட்டது. காட்சி ஊடகத்திற்கு இன்று ஆயிரக்கணக்கான சானல்கள் உள்ளன. ஆங்கிலம், இந்தி தேசிய சானல் கள், மாநிலமொழி சானல்கள் ஆகிய பிரிவுகளில் இவை உள்ளன. 24 மணிநேரமும் செய்திகள் தருகிற சானல்கள்முதல் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு இடையில் அரசியலை வெளியிடுகிற சானல்கள்வரை உள்ளன. வானொலி போலவே தொலைக்காட்சியும் ஓர் உபகரணமாகும். முன்பு தொலைக்காட்சி இருந் தால் மட்டுமே ஒருவர் சானல்களைப் பார்க்கமுடியும். பின்னர் அவை டிஷ்களிலிருந்து கேபிள்கள் மூலம் பார்க்கக்கூடியதாக வளர்ச்சியுற்றது. இன்று வீடுகளில் சானல்களைப் பார்ப்பவர்களில் பலரும் இண்டர்நெட் மூலம் பார்க்கிறார்கள்.
சினிமாவும் கருத்துப் பிரச்சாரம் செய்கிற காட்சி ஊடகம்தான். சினிமா தியேட்டர்களின் ஸ்தானத்தை சினிமாக்ஸ்கள் எடுத்துக்கொண்டன. சமூக ரீதியான காட்சியின் இயல்பை அவை மாற்றியமைத்துவிட்டன. இப்போது அவையும் மாற்றம் அடைகின்றன. கணிசமா னவர்களுக்கு சினிமா காட்சிகள் வீடுகளுக்கு வந்து விட்டது. பின்னர் அவை ‘யுடியூப்’பில் ஆரம்பித்து அமேசான் பிரேமுக்கு வந்துநிற்கிறது. அத்துடன் சினிமா காட்சிகள் ஒருநபர் மட்டுமே பார்க்கத்தக்கதாக மாறியது. சமூக ஊடகங்கள் ஏதாவது நிலையான வரைய றைக்குள் வைக்கப்படுபவை அல்ல. ஒவ்வொரு நொடியி லும் அவை மாறிக்கொண்டிருக்கின்றன. ஆன்லைன் ஊடகங்கள் யுடியூப் சானல்களுக்கு வழிமாறுகின்றன. ஃபேஸ்புக், வாட்ஸாப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், டிக்டாக், ட்விட்டர் எனப் பல்வேறு வடிவங்களில் சமூக ஊடகங்கள் செயல்படுகின்றன.
தான் சொல்வதை எல்லாம் மக்களை அங்கீகரிக்க வைக்க...
இந்த ஊடகங்களெல்லாம் இன்று ஜனநாயகத்தின் நான்காம் தூணின் சேவையை நிறைவேற்றுகின்றன வா? இதைப் பரிசீலிப்பது ஊடக உடைமையாளரின் முக்கியப் பணியாகும். இன்றைய பெரும்பாலான ஊட கங்களும் கார்ப்பரேட் முதலாளிகளின் ஊடகங்களா கும். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் அச்சு ஊடகங்களையும் காட்சி ஊடகங்களையும் நடத்துகின் றன. உண்மையில் அவர்களின் நலன்கள்தான் இன்றைய ஊடகங்களின் குறிக்கோள்களாக உள்ளன. இவையன்றி பெரும்பாலான ஊடகங்களும் மக்களின் குரலை எதிரொலிக்கவில்லை. அதனால்தான் ஜனநாய கத்தின் நான்காவது தூண் என்கிற சேவையை இன்றைய ஊடகங்கள் நிறைவேற்றவில்லை. அவை ஆளும் வர்க்கங்களின் நலன்களை மக்களிடம் பொதுப் புத்தியாக்குகிற ‘சேவை’யை முழுத் தொழில்திறனுடன் நிறைவேற்றுகிற வேலையைத்தான் செய்கின்றன. அறிஞர் நோம்சாம்ஸ்கியின் வார்த்தைகளின்படி சொல் வதென்றால், தான் சொல்வதையெல்லாம் மக்களை அங்கீகரிக்க வைக்கும் வேலையைச் செய்கிற கருவிகள் தான் இன்றைய ஊடகங்கள்.
இந்த வேலைக்கான சிறந்த சந்தர்ப்பமாக வந்து சேர்ந்தது நாடாளுமன்றத் தேர்தல். இந்தி ஊடகங்கள் பொதுவாக இந்து ஊடகங்களாக மாறிவிட்டன என்று சிலர் வர்ணனையாகக் கூறினர். உண்மையில் அவை இந்துத்துவா ஊடகங்களாக மாறின. இந்து, இந்துத்து வா எனும் இரண்டு சொற்களும் வெவ்வேறானவை. இவை இரண்டும் ஒன்றுதான் என்று மக்களின் மனதில் ஏற்றுவதற்கு அவை முயன்றன. ‘இந்துத்துவா’ என்ற சொல் சாவர்க்கார் உருவாக்கியதாகும். அவர்தான் இந்தச் சொல்லை முதன்முறையாகப் பயன்படுத்தி னார். இந்துமதத்தின் அரசியல் பிரயோகம்தான் இந்துத் துவா என்பது. இது உலகமே ஒரு கூட்டுக்குடும்பம் என்கிற விசாலமான கண்ணோட்டத்தின் வடிவமல்ல. வெறுப்பின் அரசியல் பிரயோகம் அது. மதவாதம் என்பது மதத்தின் அரசியல் வடிவம். அதற்காகக் கணிச மான ஊடகங்களையும் தங்களுக்கு ஆதரவாக மாற்ற முடிந்ததுதான் பாஜக-வின் தனித்தன்மை.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் பிரச்ச னைகளும் அரசின் நடவடிக்கைகளும் ஊடகங்களில் விவாதிக்கப்படவில்லை. பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் நாட்டுக்கு ஒரு வலுவான பாதுகாப்பா ளர் வேண்டாமா என்கிற பிரச்சனையை இடதுசாரி ஊட கங்களைத் தவிர மற்ற எல்லா ஊடகங்களும் எழுப்பின. இவை, பணமதிப்பு இழப்பு மனிதர்கள் மீதும் சமூகத்தின் மீதும் நிகழ்த்திய தாக்குதலைச் சர்ச்சைக்குள்ளாக்க வில்லை. பணமதிப்பு இழப்பு என்பது பயங்கரவாதத் திற்கு முடிவுகட்ட உதவும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் தோன்றச் செய்ததில் பெரும்பாலான ஊடகங்க ளும் வெற்றிபெற்றன. ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தி யதில் முன்னெச்சரிக்கை இல்லாததைப் பற்றிப்பலரும் விமர்சித்திருந்த போதிலும் நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஜிஎஸ்டி சர்ச்சைக்குள்ளாக்கப்படவில்லை.
பாதகமான உண்மைகள் முழுமையான இருட்டடிப்பு
இவற்றை மக்களை ஏற்கச்செய்வதற்கான வழி முறைகளை முற்றிலும் அறிவியல் ரீதியாக அமல் படுத்தினர். தங்களுக்குப் பாதகமான உண்மைகளை முழுமையாக இருட்டடிப்புச் செய்வார்கள்; தங்களுக் குத் தேவையான உண்மைகளைப் பெரிதாக வெளியிடு வார்கள். 370-வது பிரிவு ரத்துசெய்யப்பட்ட சமயத்தில் இந்தியாவிலிருந்து வித்தியாசமாக ஒரு பிரதேசத் திற்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து வேண்டுமா என்ற கேள்வி வலுவாக எழுப்பப்பட்டது. அதேசமயம் அசாம், நாக லாந்து, மேகாலயா முதலான பல மாநிலங்களுக்கும் இதே தன்மையிலான சிறப்பு அந்தஸ்து உள்ளது என்கிற உண்மையை யாரும் அறியாத அந்தஸ்தாக ஆக்கி விட்டார்கள். கேரளத்திலிருந்து அதிக தூரம் இல்லாத லட்சத்தீவு வரை பிரத்தியேக அனுமதி இருந்தால் மட்டுமே அங்குச் செல்லமுடியும் என்கிற உண்மையை எவரும் அறியாமலிருக்கச் செய்வதில் ஊடகங்கள் கவனமாக இருக்கின்றன. உண்மைகளை மக்கள்முன் வைப்பதும், வெவ்வேறான பகுப்பாய்வுகளைத் தரு வதும், அதன்மூலம் ஒரு வாசகன் அதன்மீது தனது சொந்த முடிவுக்கு வரவுமான வாய்ப்பை அவர்கள் இல்லாமல் செய்கிறார்கள்.
பொய்களைக் கட்டமைத்தல்...
பொய்களைக் கட்டமைப்பதன் மூலம் தவறான புரிதலை உருவாக்கவும் ஊடகங்கள் முயற்சி செய்கின் றன. இவற்றில் முக்கியமானவை சமூக ஊடகங்க ளாகும். சமூக ஊடகங்கள் வெளியிடுகிற சரித்திரத்தை சரியானது என்று நம்புகிறவர்கள் அதிகமானோர் உள்ள னர். சமூக ஊடகங்கள் எத்தகைய பொய்யையும் உண் மையென்று முன்வைக்கின்றன. அது அதிவேகத்தில் பரவுகிறது. ஒரு செய்தியைப் பல நபர்களிடமிருந்து வாட்ஸாப் மூலமாகவும் மற்ற வழிகளிலும் பெறுகிற ஒருவர் அது உண்மைதான் என்றே நினைப்பார். எது உண்மை, எது பொய் என்று அறியமுடியாத வடிவத்தில் ஒருவருக்குக் கொண்டுசேர்ப்பதில் ஊடகங்கள் முக்கா லமும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. கேரள அரசு மாநிலத்திற்குச் செய்கிற நல்ல காரி யங்களை முற்றிலும் இருட்டடிப்பு செய்கிற முறை யையே ஏகபோக ஊடகங்கள் பின்பற்றுகின்றன. அரசை விமர்சிக்கிற முழு உரிமை ஊடகங்களுக்கு இருக்கும்போதே, அரசு செய்கிற நல்ல காரியங்க ளையும் மக்களுக்குத் தெரிவிப்பதற்குக் கொஞ்சமும் முயற்சிக்காதது ஏகபோக ஊடகங்களின் திட்டமிட்ட முடிவேயாகும்.
ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்கு ஏற்றவாறு...
உலகை அறியும் உரிமைக்காக முன்பு எல்லா காலங்களிலும் ஊடகங்கள் செயல்பட்டுக் கொண்டி ருந்தன. அவ்வாறு பொறுமை, தியாகம் மூலம் நேற்றைய ஊடகங்கள் தங்களது வரலாற்றுக் கடமையை நிறை வேற்றின. இன்று இருப்பது மாதிரியான தொழில்நுட் பக் கல்வியும் தொழில்முறையும் இல்லாத காலத்தில்தான் ஜனநாயகத்தின் மிகவும் சக்திவாய்ந்த கருவியாக ஊடகங்கள் செயல்பட்டன. ஆனால் இன்று ஜனநாயகமே மற்றொரு தளத்திற்கு மாறியுள்ளது. மறைத்து வைக்கப்பட்டுள்ள அஜெண்டாக்கள் மூலம் ஏகபோக ஊடகங்கள் ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்கு ஏற்றவாறு மக்களிடம் பொதுப்புத்தியைக் கட்டமைக்கும் வேலையை மட்டுமே இன்று செய்கின் றன. இன்றைய ஜனநாயகத்தில் ஊடகங்கள் நான்காவது தூண் அல்ல என்பதே உண்மை!
கட்டுரையாளர்: ‘தேசாபிமானி’ முதன்மை ஆசிரியர், “சிந்தா” மலையாள வாரஇதழ், ஆகஸ்ட் 16-23
தமிழில்: தி.வரதராசன்