tamilnadu

img

இந்துக்கள் அதிகம் இருப்பதாலேயே இந்தியா ‘இந்து’ தேசமாகி விடாது

சென்னை மாநாட்டில் முன்னாள் துணை வேந்தர் மா.இராசேந்திரன் பேச்சு

தாய்மொழி பாதுகாப்பு, இந்தித் திணிப்பு எதிர்ப்பு  முழக்கத்துடன் சென்னை யில் நவம்பர் 5 அன்ற சிபிஎம் நடத்திய தென் மாநில மாநாட்டில்  தஞ்சை தமிழ் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் மா. இராசேந்திரன் பேசுகையில், ஆட்சி யாளர்களின் ஆளுகைக்குட்பட்டது தான் எல்லை என்பது உண்மையல்ல, மொழி வளர்கின்ற எல்லை தான் ஒருநாட்டின் இயற் கையான எல்லையாக இருக்க முடியும். இந்திய விடுதலைக்கு பிறகு மாகாணங்க ளின் சீரமைப்பு செய்யப்பட்டது எதனடிப் படையில் தெரியுமா? சதுர கிலோ மீட்டர் அடிப்படையிலோ, மக்கள் தொகையின் அடிப்படையிலோ  பகுக்காமல் மொழி வழி மாநிலமாக பகுக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் மொழியின் அடிப்படையில் புரிந்துகொண்ட நிர்வாக அமைப்பிற்காகத்தான் அவ்வாறு பிரிக்கப்பட்டது. 

மொழி என்பது தனிநபர் கண்டு பிடிப்பல்ல. சப்தத்தோடு இருக்கும் உழைக் கும் இடத்தில் தான் மொழி தோன்றியிருக்க வேண்டும். மருத நிலத்தில் விவசா யத்தொழிலாளர்கள் சப்தம் எழுப்பிக் கொண்டே வேலை செய்தனர். அப்பொழுது இவர்களுக்கு உரையாட ஒரு மொழி தேவைப் பட்டது. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி என்றார்களே. கல்லும் மண்ணும் என்பது மருதம், குறிஞ்சி நிலங்களாக கருதப்படுகிறது. உழைப்பு தான் மொழியை உருவாக்கியிருக்க முடியும்.

மூளையின் பெருவெடிப்புதான் மொழியை உருவாக்கியிருக்கிறது. மொழி தான் மனிதனை உருவாக்குகிறது. அனைத்து கண்டுபிடிப்பிற்கும் மொழி காரணமாக இருக்கிறது. மொழியில்லாமல் ஒரு அணுவும் அசையமுடியாது, கடவுள் உட்பட.  கை, கால்களால் மட்டும் மனிதன் பரி ணாம வளர்ச்சி பெறவில்லை. மொழி தான் மனிதனை மேன்மையடையச்செய்கிறது. வெறும் கல்லையும் கடவுளாக்க மொழி வேண்டும். கடவுளுக்கும் மொழி தேவைப் படுகிறது. ஆட்சியாளர்களுக்கு கடவுள்கள் கைவிட்ட பிறகு தற்போது திருவள்ளுவரை கையில் எடுத்திருக்கிறார்கள்.

கடவுளுக்குக் கூட பாதுகாப்பு தேவைப் படுகிறது. மக்களை கடவுள் காப்பாற்றி யது போய், மக்கள் கடவுளை காப்பாற்ற வேண்டிய காலம் வந்துவிட்டது. பெரும் பான்மை மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தனக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டும் ஆட்சி செய்தால் அது எப்படி ஜன நாயகநாடாக, குடியரசு நாடாக  இருக்க முடியும்? ஆட்சியாளர்கள் எல்லோருக்கும் பொதுவானவர்களாக இருக்கவேண்டும் அல்லவா. 

இந்தி மொழி இந்தியாவில் அதிகமான மக்களால் பேசப்படுகிறது என்பதே தவறான புள்ளிவிவரம், 54 விழுக்காட்டினர் இந்தி பேசுவதாகக் கூறப்படுவதில் போஜ்புரி மொழியினரையும் சேர்த்துச்சொல்வது என்ன நியாயம்? தனி மனிதனின் உரி மையைப் பாதுகாக்கவேண்டிய இந்த அரசு சில சாதியினருக்கும், தனக்கு வாக்க ளித்தவருக்கும் மட்டும் சிறப்புச் சலுகை செய்வது ஜனநாயகம் ஆகுமா? இந்தி பேசுபவர்களோ, இந்துக்களோ அதிகம் இருப்பதாலேயே இந்தியா இந்து தேசமாகி விடாது. இந்தி மொழிக்கு மத்திய ஆட்சி யாளர்கள் கொடுக்கும் சிறப்புச் சலுகைக ளை அட்டவணையில் உள்ள 22 மொழி களுக்கும்  கொடுத்து ஆட்சிமொழியாக்க வேண்டும். கடந்த நிதி நிலை அறிக்கையில் இந்தி மொழி வளர்ச்சிக்கு மட்டும்  50 கோடி ரூபாய்  ஒதுக்கப்பட்டுள்ளது பாரபட்சம் காட்டுவதாக உள்ளதல்லவா. 22 மொழிக ளுக்கும் தலா 50 கோடி ரூபாய்  ஒதுக்க வேண்டும்.

இந்தி படிக்கிறவர்கள் தமிழகத்தில் அதிகம் இருப்பதாக சில அமைச்சர்கள் கூறிவருகின்றனர். இந்தி படிப்பதில் எங்க ளுக்கு வெறுப்பு இல்லை. திணிப்புத்தான் கூடாது என்றோம். தமிழ்நாட்டிற்கு மட்டு மல்ல எந்த மாநிலத்திலும் இந்தி திணிப்பு  கூடாது என்கிறோம்.  மத்திய ஆட்சியாளர் கள் எல்லா மொழியையும் சமமாகத்தான் போற்றுகிறோம் என்று பொய்யுரைக்கிறார் கள். தமிழ்நாட்டில் தமிழ் தெரியாத அஞ்சல் காரர்களை பணியில் அமர்த்துகின்றார் கள். 

புதியக் கல்விக்கொள்கை அறிக்கை யில் 484 பக்கத்தில் லேங்குவேஜ் என்ற சொல் மட்டும் 416 இடத்தில் இடம் பெற்றி ருக்கிறது. சமஸ்கிருதம் என்ற வார்த்தை 23 இடத்திலும் வந்திருக்கிறது. தமிழ் 5 இடங்களில் வந்திருக்கிறது.  கன்னடம் 3 இடங்களிலும் தெலுங்கு 2 இடத்திலும், மலையாளம் 2 இடத்திலும் வந்திருக்கிறது. அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் 9 மொழியின் பெயர்கள் மட்டுமே இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மீதம் உள்ள 13 மொழிகளின் பெயர்கள் கூட இதில் இல்லை. காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கு முன்பே வந்த வரைவுக் கொள்கையில் காஷ்மீர மொழி பற்றிக் கூட இல்லை. 

இந்தியாவின் ஒற்றுமையை பாது காக்க ஒரு மொழிக்கொள்கை தேவை என்கிறார்களே. சுதந்திரத்திற்காக  இந்தியா வில்  போராடிய போது  ஒரு மொழியிலா போராட்டம் நடத்தினோம்.  

இந்தியக்கல்வி மரபு முறையில் சாதனையாளர் பட்டியலில் ஆரியபட்டர், பாஸ்கரஆச்சார்யா, சாணக்கியர், பதஞ்சலி, வடமொழிக்கு இலக்கணம் எழுதிய பாணினி ஆகியோர் இருப்பதாக பட்டியலிடுகிறார்கள். ஆனால் தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர்  பெயர் இல்லை. தமிழகத்தின் திருவள்ளுவர் இல்லை, பாரதி இல்லை, பாரதிதாசன் இல்லை, சங்ககாலம் இல்லை,  புற நாநூறு இல்லை.  கட்டிடக்கலை, பொறியி யல் கலை வல்லுநர்கள் பட்டியலில் கல்ல ணைகட்டிய கரிகாலன் இல்லை, தஞ்சை பெரியகோயில் கட்டிய ராஜராஜசோழன் இல்லை.  

வெளிநாடுகளில் திருக்குறளையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொல்லி புளங்காகிதம் அடையும் பிரதமர் மோடி இந்திய ஆட்சிமொழியில் தமிழை சேர்க்கட்டுமே. விளைநிலங்களிலிருந்து விவசாயிகளை வெளியேற்றுவது போல் இந்திய பயன்பாட்டு மொழியிலிருந்து தமிழை அப்புறப்படுத்தும் சூழ்ச்சி நடை பெற்று வருகிறது. 

நமது சாதனையாளர்கள் கணித மேதை ராமானுஜத்திற்கும், சர்.சி.வி.ராம னுக்கும் இந்தி தெரியாது. அப்துல்கலாம் என்ன சமஸ்கிருதம் படித்துவிட்டா சாதித்தார். மயில்சாமி அண்ணாதுரையும், சிவனும் தமிழ் படித்துத்தான் சந்திரயான் ராக்கெட் விட்டனர்.   உலகில் எந்த நாட்டிலும் 2 மொழிக்கு மேல் பாடத்திட்டம் இல்லை. உலகின் இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருப்ப தால் இந்தி என்ற சுமை தேவையில்லை. இந்தியாவில் வேதனையான மும்மொழிக் கொள்கையை கைவிடவேண்டும். தாய்மொழி, மற்றொரு இணைப்புமொழி போதும். இந்தியாவில் மொழிச்சுமையால் கல்வி பாதிப்பு ஏற்பட்டுள்ள தரவுகளை யூனெஸ்கோ அறிக்கையில் 2016ல்  வெளி யிட்டுள்ளது. இந்தியாவில் 4 கோடி மாண வர்கள் மொழிச்சுமையால் படிப்பை இடை யில் நிறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளது. நமது குழந்தைகளின் எதிர்காலம் இந்தித் திணிப்பில் சிக்கியுள்ளது என்றார்.

 

;