tamilnadu

img

உலகக்கோப்பை வர்ணனை

வெளிநாட்டு வர்ணனையாளர்கள் பட்டியல்

`உலகக்கோப்பை தொடரின் 12-வது சீசன் இங்கிலாந்து நாட்டில் வரும் 30-ஆம் தேதி தொடங்குகிறது.இந்த தொடரில் களமிறங்கும் 10 அணிகள் வீரர்கள் பட்டியலை வெளியிட்டு தீவிர பயிற்சியில் களமிறங்கி வரும் நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான வர்ணனையாளர்களின் பெயர்களை ஐசிசி வெளி யிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா சார்பில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் மற்றும் தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே ஆகிய 3 பேர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். வெளிநாட்டு வர்ணனையாளர்கள் பட்டியல்மைக்கேல் கிளார்க் (ஆஸி.,), குமார் சங்ககரா (இலங்கை), பிரெண்டான் மெக்கலம் (நியூஸிலாந்து), ஷான் பெல்லாக் (தென்ஆப்பிரிக்கா), மைக்கேல் ஹோல்டிங் (விண்டீஸ்), கிரீம் ஸ்மீத் (தென் ஆப்பிரிக்கா), வாசிம் அக்ரம், ரமீஸ் ராஜா(பாகிஸ்தான்), நாசர் உசைன் (இங்கி லாந்து), சைமன் டோல் (நியூஸிலாந்து), மைக்கேல் சிலேட்டர் (ஆஸி.), மார்க் நிகோலஸ் (இங்கிலாந்து) என மொத்தம் 24 வர்ணனையாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.