tamilnadu

img

ஐசிசி உலகக்கோப்பை: டூடுள் வெளியிட்டது கூகுள்

 

ஐ.சி.சி. உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குவதை முன்னிட்டு கூகுள் நிறுவனம் இன்று டூடுள் வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் இன்று தொடங்குகின்றன. 10 அணிகள் பங்கேற்கவுள்ள இந்தத் தொடரில் 48 போட்டிகள் நடைபெறவுள்ளன. இன்று நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன. இதனை முன்னிட்டு வண்ணமிகு அனிமேஷன் காட்சிகளுடன் கூகுள் நிறுவனம்  டூடுள் வெளியிட்டுள்ளது.
 

;