tamilnadu

img

சபரிமலை கோவில் நகைகளை கணக்கிட குழு அமைத்தது உச்சநீதிமன்றம்

சபரிமலை கோவில் நகைகளை கணக்கிட உச்சநீதிமன்றம் குழு ஒன்றை அமைத்துள்ளது. 
சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகிப்பது மற்றும் கோவிலுக்கு சொந்தமான ஆபரணங்களை பாதுகாப்பது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணயின் போது மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட தகவலை நீதிபதிகள் ஆய்வு செய்தனர். சபரிமலை கோவிலுக்கு சொந்தமாக பந்தள அரச குடும்ப பாதுகாப்பில் வெறும் 16 ஆபரணங்கள்தான் உள்ளதா? அரச குடும்பத்தின் பாதுகாப்பில் இருந்தாலும் அவை கடவுளுக்கு சொந்தமானவைதானே? சபரிமலை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்களின் நலனுக்காக  சட்டம் இயற்றுவதில் என்ன பிரச்சனை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் சபரிமலை கோவில் ஆபரணங்கள் தொடர்பாக கணக்கிட்டு அறிக்கை அளிப்பதற்கு,  ஓய்வுபெற்ற நீதிபதி சி.என்.ராமச்சந்திரன் நாயர் தலைமையில் தனி குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த குழு, கோவில் நகைகளின் தரம், மதிப்பு மற்றும் வகைகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து, அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. 

;