tamilnadu

img

7 பேரை விடுதலை செய்தால் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் : மத்திய அரசு

சென்னை,ஜன.7- முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி  உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்தால் அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படு த்தும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நளினி உள் ளிட்ட 7 பேரை விடுவிக்க அனுமதிகேட்டு கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழக அரசு அனுப்பிய மனுவை கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிராகரித்துவிட்ட தாகவும் நாட்டின் பிரதமர் பதவி வகித்த வர் உட்பட 15 பேர் கொல்லப்பட்ட வழக் கில் இவர்களை விடுவித்தால் சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற் படுத்தும்.  இதுபோன்று கொடூர குற்றத்திற் காக தண்டனை பெற்றவர்களை  விடு வித்தால் அது மற்ற கைதிகளுக்கு சாதக மாகி விடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

;