tamilnadu

img

அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடலாம்

நூல் வெளியீட்டு விழாவில் நீதிபதி கே.சந்துரு பேச்சு

சென்னை, டிச. 26 - இளைஞர்கள் மத்தியில் வாசிப்பு பழக் கத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு கேட்டுக்கொண்டார். எஸ்.வி.வேணுகோபாலன் எழுதி பாரதி  புத்தகாலயம் பதிப்பித்துள்ள ‘தர்ப்பண சுந்தரி’, ‘உதிர்ந்தும் உதிராத’ ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு விழா புதனன்று (டிச.26) தேவநேய பாவாணர் மத்திய நூலக  அரங்கில் (எல்எல்ஏ கட்டிடம்) நடைபெற்றது. ‘தர்பண சுந்தரி’ நூலை நீதியரசர் கே. சந்துரு வெளியிட, எஸ்.வி. வேணுகோபால னின் பெற்றோர் எஸ்.ஆர். வரதாச்சாரி-மைதிலி பெற்றுக் கொண்டனர். ‘உதிர்ந்தும் உதிராத’ நூலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா வெளியிட, கோமதி மாத்ருபூதம் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் நீதியரசர் சந்துரு பேசு கையில், “கருத்துரிமை, பேச்சுரிமை, சங்கம்  சேரும் உரிமை போன்றவற்றை அரசியல மைப்புச் சட்டம் வழங்கியிருந்தாலும் நடை முறையில் இல்லை. ஒரே அரசியலமைப்புச்  சட்டம் காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்க ளிலும், பிற பகுதிகளிலும் வெவ்வேறு முறை களில் அமல்படுத்தப்படுகிறது. ஒரே நாடு  என்கிறார்கள். ஆனால் ஒரேமாதிரி அமல் படுத்துவதில்லை” என்றார். எல்எல்டி கட்டிடத்தில் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி தேவையில்லை என்று  தீர்ப்பு வழங்கியதை சுட்டிக்காட்டிய நீதியரசர்  சந்துரு, “மக்கள் போராட, பேசுவதற்கான பொதுவெளிகள் குறைந்து வருகிறது. எனவே, பொதுவெளிகளை அதிகப்படுத்த முயற்சிக்க வேண்டும். அரசு கொள்கை முடிவு களில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று என்பதல்ல. மக்களுக்கு எதிராக இருந்தால் தலையிடலாம். அதற்கு உதாரணம்தான் அண்ணா நூற்றாண்டு நூலக வழக்கு” என்றார்.

“குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக  மாணவர்கள் நடத்தும் போராட்டம் சைட்  அடிப்பதற்காகத்தான் என்று ஒய்.ஜி. மகேந்திரன் கூறியுள்ளார். இதுபோன்ற துணுக்குகளை அவர் நாடகத்தில் வேண்டு மானால் பயன்படுத்திக் கொள்ளலாம். மாணவர்களை கொச்சைப்படுத்தக் கூடாது” என்று கடிந்தார். எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் தலைமை யில் நடைபெற்ற இந்நிகழ்வில் மருத்துவர் பி.வி. வெங்கட்ராமன், பேரா.ராஜூ, பத்திரி கையாளர் அ. குமரேசன், அழகியசங்கர், டாக்டர் ஜி. ராமானுஜம், தொழிற்சங்கத் தலை வர் எம். ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பேசினர்.

;