உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ரஞ்சன் கோகாயின் பதவிக்காலம் வரும் நவம்பர் 17ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இவர் கடந்த 2018 அக்டோபர் 3 ஆம் தேதி முதல் பதவி வகித்து வருகிறார். ரஞ்சன் கோகாய் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அடுத்து தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே என்பவரை நியமனம் செய்ய பரிந்துரைத்திருந்தார். இந்நிலையில், ரஞ்சன் கோகாயின் பரிந்துரையை ஏற்ற குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் எஸ்.ஏ.பாப்டேவை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளார். நவம்பர்18ஆம் தேதி புதிய தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் பாப்டே பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளது