tamilnadu

img

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டால் எத்தனை நிறுவனங்கள் வந்தன

சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை, செப்.24- உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் எத்தனை நிறுவனங்கள் துவங்க ப்பட்டன என்பது குறித்து அறிக்கை தாக்கல்  செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. தமிழக அரசு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை கடந்த ஜனவரி மாதத்தில் இரண்டு நாட்கள் நடத்தி முடித்தது. முன்னதாக, இந்த மாநாட்டில் பங்கேற்கும் தனியார் நிறுவனங்களின் விவரங்களை ஆராயும் வகையில் விதிகளை வகுக்க கோரி காஸ்கேட் என்ற நிறு வனம் சென்னை  உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. மேலும் அந்த மனுவில், 2015ஆம் ஆண்டு தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்குபெற்ற தனியார் நிறு வனங்களின் பின்னணியை ஆராயாததால், பல நிறுவனங்கள் கோடிக்கண க்கில் மோசடி செய்ததாக வும், அதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. எனவே 2019 ஆம் ஆண்டு மாநாட்டில் பங்கேற்கும் நிறுவனங்கள் பற்றிய தகவலை பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் விதிகளை உரு வாக்க வேண்டும் என மனுவில் கேட்கப்பட்டி ருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் தொழில்களாக மாறி உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், முதலீட்டாளர் மாநாடு நடத்தி முடித்தது தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும்  செவ்வாயன்று(செப்.24) நீதி பதிகள் எம்.சத்திய நாராயணன், என்.சேசஷாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், நடைபெற்று முடிந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழ கத்தில் எத்தனை தொழில் நிறுவனங்கள் துவங்கப்பட்டு ள்ளன என்பது குறித்தும் அதன் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்தும் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தர விட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர். 

;