tamilnadu

img

நோய்வாய்ப்பட்ட கோவில் யானைக்கு உரிய சிகிச்சை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை,நவ.28 நோய்வாய்ப்பட்ட கோவில் யானையை  கால்நடை டாக்டர்கள் பரிசோதித்து தேவையான சிகிச்சை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் பெண் யானை வேதநாயகி, கடந்த 3 ஆண்டுகளாக நோய்  வாய்ப்பட்டுள்ளதாகவும், அதற்கு உரிய  சிகிச்சை அளிக்கும் வகையில், யானையை  முதுமலை யானைகள் முகாமிற்கு அனுப்பி  வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை  உயர்நீதிமன்றத்தில் பொதுநல  வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகி யோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘யானையின் கால்களில் உள்ள காயத்  துக்கு மஞ்சள் கட்டு போட்டு, பிளாஸ்டிக் உறை களைக் கொண்டு மூடி கட்டப் பட்டுள்ளது.

முறையாக யானை பராமரிக்கப்பட வில்லை’ என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், ‘வளர்ப்பு யானையை அதன்  உரிமையாளர் முறையாக பராமரிக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ  பரிசோதனையும் செய்யவேண்டும் என்று  தமிழ்நாடு வளர்ப்பு விலங்குகள் பராம ரிப்பு சட்ட விதிகளில் கூறப்பட்டுள்ளது. இந்த விதிகள் முறையாக பின்பற்றப்படு கின்றனவா? என்பதை கண்காணிக்க மாநில  அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள்  உள்ளன. எனவே மனுதாரர் ஈரோடு மாவட்டக் குழுவை அணுக வேண்டும். மாவட்டக் குழு வில் இடம் பெற்றுள்ள வன உயிரின காப்பா ளர், கால்நடை டாக்டர்கள் ஆகியோர் யானையை பரிசோதிக்க வேண்டும். தேவையான சிகிச்சை வழங்கவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

;