tamilnadu

img

81 வயது பாட்டியை திருமணம் செய்த 24 வயது இளைஞன்

கட்டாய ராணுவத்திலிருந்து தப்பிக்க உக்ரைன் நாட்டில் 24 வயது இளைஞன் ஒருவன்  81 வயது பாட்டியை திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து ராணுவ அதிகாரிகள் கூறியதாவது, கட்டாய ராணுவ சேர்க்கை என்பது உக்ரைன் நாட்டில் அமுலில் உள்ள ஒன்றாகும். ஆனால் இதில் சில விதிமுறைகள் உள்ளது. அதாவது மனைவி மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவரை பார்த்துக் கொள்ள இளைஞர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. 

இந்நிலையில் கட்டாய ராணுவத்திலிருந்து தப்பிக்க, 81 வயது பாட்டியை 24 வயதை சேர்ந்த இளைஞன் திருமணம் செய்துள்ளார். மேலும் இருவரும் போலியான திருமண வாழ்க்கை வாழ்வதாக கருதப்பட்டால் சட்டப்படி திருமணத்தை ரத்து செய்து ராணுவத்தில் சேர்க்கலாம். ஆனால் சட்டப்பூர்வமாக சான்று வைத்திருப்பதால் அவர் ராணுவத்தில் சேர வேண்டிய அவசியமில்லை என அதிகாரிகள் கூறினார்.
 

;