tamilnadu

img

பாதாள சாக்கடை நிரம்பி சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் தொற்று நோய் ஏற்படும் அபாயம்

ஈரோடு, அக்.31- ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பெருந்துறை சாலை அருகே  பாதாள சாக்கடை நிரம்பி சாலையில் கசிந்து வருவதால் அப்பகுதி மக்க ளுக்கு தொற்று நோய் வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் அருகே உள்ள மோகன் குமார மங்கலம் வீதிக்கு செல்லும் வழியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு  பாதாள சாக்கடை அமைக்கப்பட் டுள்ளது. தற்போது தொடர்ந்து மழை  பொழிந்து ஆங்காங்கே தண்ணீர்  நின்று வாகன ஓட்டிகளுக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக இருந்து வருகிறது. இந்நிலையில்,பாதாள சாக்கடை நிரம்பி சாலையில் ஓடு கிறது. அங்குள்ள சாக்கடை முழு வதும் நிரம்பி அப்பகுதி முழு வதும் துர்நாற்றம் வீசி வருகிறது.  இதனால், அப்பகுதி மக்களுக்கு  தோற்று நோய் ஏற்பட வாய்ப் புள்ளது. எனவே, ஈரோடு மாநக ராட்சி நிர்வாகம் உடனடியாக எடுக்க சாக்கடையில் தேங்கியுள்ள  கழிவு நீரையும், பாதாள சாக் கடையில் இருந்து கசிந்து வரும் கழிவு நீரையும் உடனடியாக சீரமைத்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.