tamilnadu

img

உண்மைக்கு புறம்பாக பேசி வரும் சட்டமன்ற உறுப்பினர் மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

ஈரோடு, நவ.9- பெருந்துறை அரசு பள்ளி இடம் குறித்து உண்மைக்குப் புறம்பாக செய்தியை தெரிவித் துள்ள பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியரின் நடவடிக் கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் ஈரோடு மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது, ஈரோடு மாவட்டம், பெருந் துறை நகரம் அரசு ஆண்கள்  பள்ளியில் விளையாட்டு மைதா னத்தை கோவில் பயன்பாட்டிற் காக நில மாற்றம் செய்ய உத் தரவிட்டுள்ள ஈரோடு மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி 21.10.2010 அன்று இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் மற்றும் இந்திய மாண வர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட் டது. மேலும்,பள்ளி மைதானத்தை மீட்க வேண்டும் என வலியுறுத்தி இவ்விரு அமைப்பின் சார்பில் தொடர் நடவடிக்கைகளுக்கும் திட்டமிட்டிருந்தனர்.  இதன்ஒருபகுதியாக பெருந் துறை நகர் முழுவதும் சுவரொட்டி கள் ஒட்டப்பட்டது. அடுத்த கட்ட மாக நவ.6 ஆம் தேதியன்று பெருந் துறை புதிய பேருந்து நிலையத் தில் தர்ணா போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இவ்வாறு தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், இந் திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் அளித்த ஆட்சேபனை மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத்துறைக்கு வகை மாறுதல் செய்யப்பட்ட இடம் விளையாட்டு மைதானம் ஆகிய பயன்பாட்டில் உள்ளதால், இப்பயன்பாட்டை கருத்தில் கொண்டு 19.9.2019 அன்று மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த வகை மாறுதல் உத்தரவின் மூலம்  ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தான் உண்மை நிலை.  ஆனால், ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாக பெருந் துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் கடந்த  நவ.3 ஆம் தேதியன்று ஒரு பத்தி ரிக்கை செய்தி வெளியிட்டுள் ளார். இதில் கோயிலுக்கு இடம் வேண்டி ஒரு சமூகத்தினர் மனு அளித்திருந்தனர். ஆனால் அந்த  மனு மீது எந்த மேல் நடவடிக்கை யும் எடுக்காமல் ஒரு வாரத்திற்கு முன்பே நிராகரிக்கப்பட்டுவிட் டது. அரசு நிலம் தனியாருக்கோ,  தனியார் நிறுவனங்களுக்கோவழங்கப்படமாட்டாது. இது சம் பந்தமாக பொதுமக்கள் யாரும் பயப்பட தேவையில்லை. மேற்படி அரசுப் பள்ளி சம்பந்தமாக தவ றான கருத்துக்களை யாரும் நம்ப வேண்டாம், என ஆட்சியர் உறுதி  அளித்துள்ளார் என உண்மைக்கு புறம்பாக அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, 16.10.2012 அன்று அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தை கோவிலுக்கு மாற்றம் செய்ய வருவாய்த்துறை மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட் டது. மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் மற் றும் அனைத்து அரசியல் கட்சி கள் நிர்பந்தத்திற்கு பிறகு வட்டாட் சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அரசு பள்ளி  மைதானம், கோவில் பயன்பாட் டிற்கு ஒதுக்கீடு செய்வதை கைவிடுவது என வட்டாட்சியர் உள்ளிட்டோர் கையெழுத்திட்டு உறுதி அளித்திருந்தனர். இதன் மீது நீதிமன்றம் தலையிட்டு பள்ளி  நிலத்தை கோவில் பயன்பாட் டிற்கு தரக்கூடாது என உத்தர விட்டது.  இதனை எல்லாம் கணக் கில் கொள்ளாமல் அரசுப்பள்ளி நிலத்தை கோவில் பயன்பாட் டிற்கு வழங்க முடிவு எடுத்தது சரியானதல்ல. ஆட்சியர் நடவ டிக்கை சட்டவிரோதமானது. ஆட்சியரின் நடவடிக்கையை நியாயப்படுத்த சட்டமன்ற உறுப் பினர் முயல்வது இந்த விஷயத் தில் தனது தவறான நடவடிக் கையை மூடிமறைக்கும் செயலா கும். இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங் கம் சார்பில் 6 ஆம் தேதி அன்று நடைபெறவிருந்த போராட்டத் திற்காக பெருந்துறை நகரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் முழு வதும் அகற்றப்பட்டது போன்ற சம்பவங்கள் மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டோர் செய்த தவறுகளை மறைக்க கூடிய செயலாகவே கருத வேண்டியுள்ளது.  எனவே, பெருந்துறை அரசு பள்ளியில் இடம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாக உண் மைக்கு புறம்பாக பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் வெளி யிட்டுள்ள செய்தியை கண்டித் தும், நீதிமன்ற உத்தரவை மீறி 19.9.2019 அன்று அரசு பள்ளி மைதானத்தை கோவிலுக்கு வழங்க விதிகளை மீறிய அனை வர் மீதும் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

;