tamilnadu

img

வீட்டுமனை பட்டா கேட்டு வட்டாட்சியரிடம் மனு

ஈரோடு, ஜூலை 3- வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி சத்தியமங்கலம் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம் பட்டி நகராட்சி பகுதிகளில் 14 ஆவது வார்டு ஜேஜே.நகர் பகுதியில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து  வருகின்றனர். இதில் 150 குடும்பங்களைச்  சேர்ந்தோர் சொந்த வீடு இல்லாதவர்களா வர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இலவச வீட்டுமனை, வீட்டு மனை பட்டா ஆகியவற்றை வழங்கக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக சத்தியமங்கலம் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். இதில் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் பவானி சாகர் கிளைத் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சி.சேகர், சிபிஎம் ஒன்றிய செய லாளர் சுப்பிரமணி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஒன்றிய தலைவர் கேரங்க சாமி, விவசாய தொழிலாளர்கள் சங்கத் தின் நிர்வாகி சத்தியமூர்த்தி, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்  சங்கத்தின் ஒன்றியத் தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.