tamilnadu

img

கொடிவேரி தடுப்பணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு

கோபி, பிப். 1- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி  தடுப்பணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன் கோட்டை ஆகிய இரு பாசன வாய்க்கால்களுக்கு தண் ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை ஆகிய இரு பாசன வாய்க்கால் களுக்கு இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற  கொடிவேரி பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் பிப்.1ஆம் தேதி  முதல் மே.5ஆம் தேதி வரை இரண்டாம் போக பாசனத் திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டார்.  அதன்படி, சனியன்று கொடிவேரி தடுப்பணையி லிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை ஆகிய இரு பாசன வாய்க்கால்களுக்கு பொதுப்பணித்துறை அதிகா ரிகள் மற்றும் கொடிவேரி பாசன விவசாயிகள்  தண்ணீரைத் திறந்து வைத்து மலர் தூவி வணங்கினர். 120 நாட்களுக்கு திறக்கப்படும் தண்ணீரால் கோபிசெட்டிபாளையம், பவானி மற்றும் அந்தியூர் ஆகிய மூன்று தாலுகாக்களில் உள்ள 24 ஆயிரத்து 504 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடி பாசன வசதியும், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் மறைமுக பாசன வசதியும் பெறும். இந்நிகழ் வில் பொதுப்பணித்துறைஅதிகாரிகள், கொடிவேரி பாசன விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;