tamilnadu

img

சீர்மரபினருக்கு ஓ.பி.சி.யில் உள் ஒதுக்கீடு வழங்க கோரிக்கை

ஈரோடு, ஜன. 27- பழங்குடி சீர்மரபினர் மக்களுக்கு மிகவும் பிற்ப டுத்தப்பட்டோருக்கான(ஓபிசி) இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க கோரி ஈரோடு மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளிக்க இலையால் ஆடை அணிந்து வந்தனர்.  இம்மனு குறித்து சீர்மரபினர் நலச்சங்கத் துணை  தலைவர் எம்.முனுசாமி கூறுகையில், இதர பிற்படுத் தப்பட்டோர் பட்டியலிலிருந்து, பழங்குடி சீர்மரபி னர் (டி.என்.டி) இனங்கள் மாற்றப்பட்டது. இதனால், பழங்குடி சீர்மரபின மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட இடஒதுக்கீடுகள், அரசின் நலத் திட்டங்கள் போன்றவைகளின் பலன்கள் கிடைப்ப தில்லை. இதனை மாற்ற  வேண்டுமென பலமுறை கோரிக்கை வைத்த நிலையில், மத்திய அரசு ரோகிணி ஆணையம் அமைத்து, ஆறு வார காலத் தில் விசாரித்து அறிக்கை வழங்கப்படும் என அறி வித்தனர். ஆனால் 27 மாதங்கள் ஆகியும், அறிக்கை வழங்கப்படாமல், இன்னும் கால நீட்டிப்பு செய்யப் பட்டு வருகிறது.  எனவே முன்பு போல, பழங்குடி சீர்மரபினர் என அறிவிக்க வேண்டும். ஒன்பது சதவிகித ஓபிசி ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். இம்மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், இதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும். ஈரோடு மாவட்டம் உட்பட தமிழகத்தில் உள்ள சீர்மரபினருக்கு, பழங்குடி சீர் மரபினர் என அறிவித்து சான்று வழங்க வேண்டும், என வலியு றுத்தி மனு அளிக்க வந்ததாகக் கூறினார். இவர் களை உள்ளே அனுமதிக்காமல் காவல் துறையி னர் தடுத்து நிறுத்தியதாக அவர் கண்டனம் தெரிவித் தார்.

;