tamilnadu

img

சுங்கச்சாவடிகளால் தமிழகத்தில் தொழில்கள் முடக்கம் முன்னாள் எம்.எல்.ஏ., கே.பாலபாரதி குற்றச்சாட்டு

 

கோபி, ஜன. 19- சுங்கச்சாவடிகளால் தமிழகத்தில் தொழில்கள் முடங்கி  உள்ளதாக மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி குற்றஞ்சாட்டியுள்ளார்.   ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கீழ்வாணியில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்கூட்டம் சனியன்று நடைபெற்றது. இக்கூட் டத்தில் கட்சி நிதி ஒப்படைப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இக்கூட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் ப.மாரிமுத்து தலைமை தாங்கினார். இதில்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினருமான கே.பாலபாரதி சிறப்புரையாற்றி னார். அப்போது அவர்பேசுகையில், கரூர் மாவட்டம், மண வாசி சுங்கச்சாவடியில் அனுமதிச்சீட்டு இருந்தும் தனது  காரை அனுமதிக்கவில்லை. இது குறித்து சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும் போது துப்பாக்கியுடன் ஒருவர் வந்ததை கண்டு அச்ச மடைந்ததாகக் கூறினார். இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சி யர் விசாரணை மேற்கொண்டு இது போன்ற ஆயுதம் இருப்பதற்கான விளக்கத்தை பெற்று நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். சுங்கச்சாவடியில் ஆயுதம் ஏந்திய  நபர்கள் வைம்திருப்பது பொதுமக்களிடம் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், ஒரு தனியார் நிறுவனச் சுங்கச்சாவ டியில் துப்பாக்கியுடன் நிற்கவைப்பது சரியான நடவ டிக்கை இல்லை என்பதையும் தெரிவித்தார்.  மேலும் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் அதிக  கட்டண வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா மற்றும் வடமாநிலங்களைப் போல் சுங்கச்சாவடிகளை உடனடி யாக முற்றிலும் நீக்க வேண்டும். மேலும் சுங்கச்சாவடிகளால் தமிழகத்தின் தொழில்கள் முடங்கியுள்ளது. ஆகவே இத் தகைய முறையற்ற நடவடிக்கையை மாநில அரசு கண் காணித்து முறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;