tamilnadu

ஈரோடு, தருமபுரி, சேலம் முக்கிய செய்திகள்

வனவிலங்குகளை வேட்டையாட வந்த மூவர் கைது

ஈரோடு, டிச. 10- சத்தியமங்கலம் வனப்பகுதியில் வேட்டையாட வந்த 3 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.  சத்தியமங்கலம்  புலிகள் காப்பக ஆசனூர் வனப்பகுதி யானது தமிழக- கர்நாடகம் ஆகிய  இரு மாநில எல்லை யில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி  முழுவதும் வனத் துறையினர்  ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் வனபகுதியில் சிலர் விலங்குகளை வேட்டை யாடுவதாக கிடைத்த தகவலையடுத்து மேற்கு பகுதியில் சுற்றித்திரிந்த 3 பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் கேர்மாளம் அருகே உள்ள கானக்கரையை சேர்ந்த ஜடையன்(53), மாதேஸ்(32) மற்றும் கோத்தகிரியைச் சேர்ந்த முருகேஷ்(40) என்பது தெரியவந்தது.  இவர்களிடமிருந்து வேட்டையாடுவதற்கு பயன்ப டுத்திய சுருக்கு கம்பி, அரிவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் அனுமதியின்றி காட்டில் நுழைந்ததாக வழக்குப்பதிவு  செய்தனர். அதனைத் தொடர்ந்து ஆசனூர் புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநர் குமளி வெங்கட் அப்பலா  நாயுடு முன் வேட்டைக்காரர்களை ஆஜர்படுத்தி னர். இந்த வழக்கை விசாரித்த அவர், வனத்தில் அத்துமீறி  நுழைந்து விலங்குகளை வேட்டையாட முயன்ற குற்றத் திற்காக மூவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம்  விதித்து உத்தரவிட்டார்.

சுகாதார வளாகத்தை திறக்க வலியுறுத்தல்

தருமபுரி, டிச.10- பாலக்கோடு அருகே பயன்பாடின்றி பூட்டிக்கிடக்கும் சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வாழைத் தோட்டம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பெரும்பாலான வீடு களில் தனிநபர் கழிப்பிட வசதி இல்லை. இதனால் மக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். இதனையடுத்து, கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.13 லட்சம் மதிப்பில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால், முறையான பரா மரிப்பு இல்லாததால், தற்போது சுகாதார வளாகம் மூடப் பட்டு விட்டது. இதனால், இப்பகுதியை சேர்ந்த  பெண்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவல ரிடம் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே, உரிய பராமரிப்பு பணிகளை மேற்க் கொண்டு, இந்த சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முதல் நாளில் 100  வேட்பு மனுக்கள் தாக்கல்

ஈரோடு, டிச. 10- ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலின் முதல் நாள் வேட்பு மனுத்தாக்கலில் 100  பேர் மனுத்தாக்கல் செய்துள் ளனர்.   தமிழகத்தின் 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு டிச.9 ஆம் தேதி முதல் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்ய லாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு மாவட்ட,  யூனியன் அலுவலகத்தில்  டிச.9 ஆம் தேதியன்று காலை 10 மணி முதல் மாலை  5  மணி வரை வேட்பு மனுத்தாக் கல் நடைபெற்றது. இதில் முதல் நாளே மாவட்ட பஞ் சாயத்து கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் ஆகிய பதவிக்கு சுமார் 100 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

தேங்கி கிடக்கும் கழிவுநீர் குட்டை நோய் தொற்றும் ஏற்படும் அபாயம்

இளம்பிள்ளை, டிச.10- சின்ன சீராகப்பாடி அரசு பள்ளி நுழைவு வாயில் முன்பு நாள் கணக்கில் கழிவுநீர் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அவதியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், சின்ன சீர காபாடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியை ஒட்டிய குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பள்ளியின் சுற்று சுவரை ஒட்டி குட்டை போல் தேங்கியுள்ளது. இந்த கழிவுநீர் குட்டை பள்ளி நுழைவு வாயில் பகுதியில் நாள் கணக்கில் தேங்கி கிடப்பதால் சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாயம் உள்ளது. மேலும்,கழிவுநீர் குட்டையில் கொசு புழுக்கள் உற்பத்தியாகி வருவதால், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசி ரியர்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த கழிவுநீர் குட்டையை அகற்ற வலியுத்தி, வீர பாண்டி வட்டரா வளர்ச்சி அலுவலர் மற்றும் தொடக்க கல்வி அலுவலரிடம் பலமுறை புகாரளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே,மாணவர்களின் நலன் கருதி சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.