tamilnadu

கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தங்கிட எல்லையில் ஏற்பாடு மாவட்ட ஆட்சியர் தகவல்

சத்தியமங்கலம், மார்ச் 19- தமிழகம் - கர்நாடக மாநில எல்லையில் கொரோனா அறிகுறியுடன் வரும் கர்நாடகப் பயணி கள் தாளவாடியில் அமைக்கப்பட்டுள்ள தனிவார்டில் தங்க ஏற்பாடு செய்யப்படுள்ளதாக மாவட்ட ஆட்சி யர் சி.கதிரவன் செய்தியாளர்களிடம் தெரி வித்தார். தமிழகம் - கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பயணிக்கும் வாகனங்கள் தாளவாடி, ஆசனூர் மற்றும் திம்பம் வழியாக பயணிக்கின்றன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான கர்நாடகப் பயணிகள் தமிழகம் வந்து செல்வதால் கொரோனா அச்சுறுத்தல் காரண மாக இரு மாநில எல்லையான பண்ணாரி சோத னைச்சாவடியில் சுகாதாரத்துறையினர் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகளுக்கு காய்ச்சல் பரிசோதனையும் செய்யப்படுகிறது.  இந்நிலையில், அங்கு நடைபெற்று வரும்  சுகாதாரப் பணியை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் புதனன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப் போது அவர் செய்தியாளர்களை சந்திந்து பேசுகை யில், கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வரும்  பயணிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்ற னர். அச்சோதனையில் கொரோனா அறிகுறி தென்பட்டவர்களை தாளவாடியில் அமைக்கப்பட் டுள்ள தனிவார்டில் தீவிர கண்காணிப்பிற்குட் படுத்தபடுவர் என்று கூறினர். மேலும், கர்நாடகத் திலிருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வாகன ஓட்டிகளிடம் கை கழுவுதல், முகக்கசவம் அணி தல் போன்ற முன்னெச்சரிக்கை விழிப்புணர்வும்  ஏற்படுத்தப்பட்டது.

;