ஈரோடு, மே 19-பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.1.45கோடிக்கு தேங்காய் கொப்பரை ஏலம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் 1 லட்சத்து 75 ஆயிரம் கிலோ கொப்பரைதேங்காயை 3,681 மூட்டைகளில் விற்பனைக்குக் கொண்டு வந்தனர். இதில், முதல் தர கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.90.65க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.83.65க்கும் ஏலம் விடப்பட்டது. இரண்டாம் தர கொப்பரை அதிகபட்சமாக ரூ.86. 35க் கும் குறைந்தபட்சமாக ஒருகிலோ ரூ.58.40க்கும் விற்பனையானது. வேளாண்மைஉற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற இந்த ஏலத்தில் மொத்தம் ரூ.1.45 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.