tamilnadu

img

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து- மாணவர்களிடம் வசூல் செய்த தொகையை திருப்பி அளித்திடுக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

கோபி, பிப்-5 5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு வரும் காலங்களிலும் ரத்து செய் யப்பட்டதை தொடர்ந்து தேர்வுக்காக வசூல் செய்யப்பட்ட தொகையை ஆசிரியர் திருப்பி அளிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச் சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித் துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள குள்ளம்பா ளையத்தில் ரூ.61.16 லட்சம் மதிப்பீட் டில் புதிதாக கட்டப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங் கத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச் சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார். மேலும், 36பயனாளிக ளுக்கு ரூ.18 லட்சம் மதிப்பிலான கறவை மாடு கடனுதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.   இதனைத்தொடர்ந்து செய்தி யாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர்  கூறுகையில், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் காலங்களிலும் ரத்து செய்யப்பட் டது. ஆகவே, தற்போதுள்ள நடை முறையில் தேர்வு முறையே தொடரும்.  பொதுத்தேர்வுக்காக மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட தொகையை ஆசிரியர்கள் திரும்ப அளிக்க வேண் டும் என்றார்.  மேலும், சி.பி.எஸ்.சி பள்ளிகளில் கட்டாயக் கல்விதிட்டத்தில் 25 சதவி கித இட ஒதுக்கீடு குறித்து அனைவருக் கும் ஆணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது போன்று செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.  இவ்விழாவில் கூட்டுறவு சங்கங் களின் இணைப்பதிவாளர், கோட்டாட் சியர், தாசில்தார்கள் மற்றும் கழக நிர் வாகிகள் உட்பட பலர் கலந்து கொண் டனர்.

;