tamilnadu

img

உலகின் மிக விலை உயர்ந்த முகக்கவசம்

இஸ்ரேலில் உள்ள நகை நிறுவனம் உலகின் மிக  விலை உயர்ந்த முகக்கவசம் ஒன்றை தாயாரித்து வருகிறது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் மிகப்பெரிய நகை நிறுவனமான யுவெல் தங்கம் மற்றும் வைரத்தால் ஆன விலை உயர்ந்த முகக்கவசத்தை உருவாக்கி உள்ளது.  18 காரட் தங்கத்தால் ஆன இந்த முகக்கவசத்தில் 3600 வெள்ளை மற்றும் கருப்பு வைரங்கள் பொறுத்தப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப என்99 பில்டருடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முகக்கவசம் 11 கோடியே 22 லட்சத்து 45 ஆயிரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் இறுதிக்குள் இதனை உருவாக்கும் பணி நிறைவடையும்.இது உலகின் மிக விலை உயர்ந்த முகக்கவசமாக இருக்கும் என்றும் யுவெல் நிறுவனத்தின் உரிமையாளரும் இந்த முகக்கவசத்தை வடிவமைத்தவருமான ஐசக் லெவி தெரிவித்துள்ளார்.