tamilnadu

இலங்கையில் மறுவாழ்வு முகாம்களில் முஸ்லிம் அகதிகள்

கொழும்பு, மே 18-இலங்கையில் தஞ்சம் கோரியுள்ள ஒரு பகுதி முஸ்லிம் அகதிகள் வவுனியா - பூந்தோட்டம் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.இவர்கள் பூந்தோட்டம் கூட்டுறவு கல்லூரிக்கு வெள்ளி இரவு அழைத்து செல்லப்பட்டதாக வவுனியா மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சுமார் 36 முஸ்லிம் அகதிகள்வவுனியாவிற்கு அழைத்து செல்லப் பட்டுள்ளனர்.தமிழ் அரசியல் தலைவர்களின் எதிர்ப்புக்களை மீறியே இந்த ஏற்பாடு நடந்துள்ளது.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் அகதிகள் இலங்கையில் தஞ்சம் கோரியிருந்தனர்.இலங்கையில் கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர், முஸ்லிம் அகதிகள்இலங்கையில் பெரிய அச்சுறுத் தலை எதிர்நோக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர்.இதனையடுத்து, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிலையத்தில் பதிவுகளை மேற்கொண்டு மூன்றாம் நாடொன்றுக்கு செல்லவுள்ள அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஐநா, இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தது.இதையடுத்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்ட வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவு கல்லூரியில் அவர்களை தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.