tamilnadu

img

இடது கை என்னும் புதையல்

சண்டே ஸ்பெஷல்

மனித குலத்தில் சாதி, மதம், இனம் என பல்வேறு வகை யான வேறுபாடு உள்ளது போல, இடது கையைப் பயன்படுத்துபவர்களையும் தனி இனமாக மக்கள் கருதுகின்றனர்.     காரணம் இடதுகை பழக்கம் உடை யவர்கள் பெரும்பாலும் தனித்தன்மை யுடன் காணப்படுவர். தண்ணீருக்குக் கீழே நல்ல பார்வைத் திறன் இவர்களுக்கு இருக்கும். துடிப்பான திறன், கூர்மையான புத்தி, அதிக ஞாபக சக்தி என அனைத்தி லும் முன்னணியாக இருப்பதனால் இடக்கையைப் பயன்படுத்துபவர்களை மனித குலம் வேறுபடுத்திப் பார்க்கிறது.  இத்தகைய சிறப்பு அம்சங்களைப் பெற்றுள்ள இடதுகை நபர்கள் பல்வேறு துறையில் சாதித்தாலும், அவர்களை அங்கீ கரிப்பது விளையாட்டுத்துறை மட்டுமே. கிரிக்கெட், டென்னிஸ், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ்,பேஸ்பால் போன்ற விளையாட்டுகளில் இடக்கையைப் பயன்படுத்தும் வீரர் - வீராங்கனைகளுக்கு உலகளவில் சிறந்த அங்கீகாரம் தொடர்ந்து கிடைத்து வருகிறது.   மேற்கூறப்பட்ட விளையாட்டுகளில் இடதுகை பயன்படுத்தும் நபர்களின் செயல்பாடுகளைப் பற்றிப் பார்க்கலாம். 

கிரிக்கெட்

பந்துவீச்சில் அதிக முன்னுரிமையைப் பெறுகிறார்கள். ஸ்விங் மற்றும் டேர்ன் முறைகளில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். மணிக்கட்டு சுழற்பந்து வீச்சுகளைத் திறமையாகச் செயல்படுத்தி சாதனை படைக்கிறார்கள். பேட்டிங்கில் இடதுகை வீரர்கள் அசால்ட்டாக சிக்ஸர் விளாசு வார்கள்.

டென்னிஸ்

சர்வீஸ் மற்றும் பந்தைத் திருப்பு வதில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்திக் காரர்கள். லெக் மற்றும் ரைட் பகுதிகளில் சிரமமின்றி அதிரடியாகப் பந்தைத் திருப்பு கிறார்கள். வலதுகை பழக்கம் உள்ள வர்கள் லெக், ரைட் பகுதிகளில் ஒரே மாதிரி யாகப் பந்தைத் திருப்ப முடியாது.
 

பேட்மிண்டன்

சர்வீஸ், டிராப், ஸ்மாஷ் பிரிவுகளில் இடதுகை வீரர் - வீராங்கனைகள் அசத்த லாகச் செயல்பட்டு வெற்றியைக் குவித்து வருகிறார்கள்.  வலதுகை பழக்கம் உடை யவர்கள் டிராப் செய்ய மாறி மாறி திரும்பி எதிர் பக்கம் ரிலீஸ் செய்ய வேண்டும். ஆனால் பக்கவாட்டில் திரும்பாமல் டிராப் செய்வதால் உலக பேட்மிண்டன் துறையில் இடதுகை நபர்களே அதிகளவில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.  

பேஸ்பால்

கிரிக்கெட் விளையாட்டைப் போலவே இதிலும் இடதுகை எஜமான்கள் சிறப்பம் சம் பெறுகிறார்கள்.மேலும் துப்பாக்கி சுடு தல், வில்வித்தை, ஸ்குவாஷ் போன்ற விளையாட்டுகளிலும் இடக்கை மந்திரம் ஆதிக்கம் செலுத்துகிறது என்பது குறிப் பிடத்தக்கது.

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 13-ஆம் நாள் உலக இடது கை பழக்கம் உள்ளவர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இடதுகை பழக்கம் உள்ளவர்கள் வலதுகை பழக்கம் உள்ளவர்களைவிட 9 வருடங்கள் குறைவாகத் தான் உயிர் வாழ்கிறார்கள் என்பதே வேதனையான செய்தி.

- சதீஸ் முருகேசன்