ஹைதராபாத்,நவ.7- தெலுங்கானா மாநிலத்தில் நஷ்டத்தில் இயங்கி வரும் அரசு போக்குவரத்துக் கழக்ததை அரசுடன் இணைக்க வேண்டும், பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 34-வது நாளாக வியாழனன்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டனர். அரசு விதித்த காலக்கெடுவுக்குள் பணிக்கு திரும்பாத 48 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்களை தாங்களாகவே பணியிலிருந்து விலகியதாக அரசு எடுத்துக்கொள்ளும் என முதல்வர் சந்திரசேகர ராவ் அராஜகமாக அறிவித்தார். எனினும் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாமல் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 34-வது நாளான வியாழனன்று பணிமனை மற்றும் பல்வேறு இடங்களில் போராட்டம், மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.