ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியதில் 3 பாதுகாப்பு படை வீரர்கள் பலியானதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் கிரீரி என்ற பகுதியில் திடீரென தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார். இதனை அடுத்து சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீஸார்கள் திருப்பி தாக்கினர். இந்த தாக்குதலில் இரண்டு சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் ஒரு காஷ்மீர் மாநில போலீஸ் உள்பட மூன்று பேர் பலியாகியுள்ளனர் .
இதனை அடுத்து அந்த பகுதியை ராணுவம் சுற்றி வளைத்துச் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு 3 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.