tamilnadu

இணைய வசதி இல்லாத பழங்குடியின மாணவர்களுக்கு பள்ளியில் சிறப்பு வகுப்புகள்

மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோரிக்கை ஏற்பு

பொள்ளாச்சி, ஆக.11- தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் முயற்சியால், பொள்ளாச்சி அடுத்த புளியங் கண்டியில் இணைய வசதி இல்லாத பழங்குடி யின மாணவர்களுக்கு அருகில் உள்ள  பள்ளியில் சிறப்பு  வகுப்புகள் துவங்கப்பட் டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத் திற்குட்பட்ட  புளியங்கண்டி பகுதியில் மின்சார  வசதியும், தொலைபேசிகளும் இல்லாத நிலையில் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாத சூழலுக்கு பழங்குடியின மாணவர்கள் தள்ளப்பட்டனர். இதனால் இவர்களது கல்வி கேள்விக்குறியானது. இது தொடர்பாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கும், கோவை மாவட்ட ஆட்சியருக்கும் பழங் குடியின மாணவர்களுக்கு நேரடி சிறப்பு வகுப்புகள் தொடங்கப்பட வேண்டுமென கடிதம் வாயிலாக கோரிக்கையை முன் வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, செவ்வாயன்று கோட்டூர் பேரூராட்சிக்குட்பட்ட புளியங் கண்டி குடியிருப்பு பகுதியில் உள்ள துவக்கப்பள்ளியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சித்ரா மற்றும் மேலும் நான்கு ஆசிரியர்களை கொண்டு 9, 10 மற்றும் 12 ஆம்  வகுப்பு மாணவர்களுக்கு தனிமனித இடைவெளியுடன் தனித்தனி அறையில் அமர வைக்கப்பட்டு சிறப்பு வகுப்புகள் துவங்கப் பட்டன.
 

;