tamilnadu

img

முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வுகளுக்கான மதிப்பெண் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2144 முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை பணியிடங்களுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 1,47,594 பேர் தேர்வை எழுதினர். இந்நிலையில் இதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரபூர்வ இணையத்தில் காணலாம். மேலும் தேர்வு முடிவுகள் பாடங்கள் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.
 

;