tamilnadu

img

முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி சிறையில் நளினி உண்ணாநிலை

சென்னை,அக்.26- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். 7 பேரையும் முன்கூட்டி விடுதலை செய்ய ஆளுநருக்கு சட்டப்பிரிவின் கீழ் பரிந்துரைசெய்ய அமைச்ச ரவையில் முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. சிறையில் உள்ள 7 பேரையும் ஆளுநர் விடுதலை செய்ய வேண்  டும் என அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் வலியு றுத்தி வருகின்றனர். அவர்கள் 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று ஆளுநர் தெரிவித்துவிட்டதாக தகவல் பரவியது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் வரவில்லை.

வேலூர் சிறையில் அடைக்கப் பட்டுள்ள நளினி அவரது மகள் திருமண ஏற்பாட்டுக்காக 51 நாட்கள் பரோல் கேட்டார். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அவருக்கு பரோல் வழங்கப்பட்டது. ஆனால் திருமண ஏற்பாடுகள் எதுவும் முடிவு செய்யவில்லை இதனையடுத்து பரோலை நீட்டிக்க கோரி நளினி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. கடந்த சிலநாட்களுக்கு முன்பு  வேலூர் சிறையில் உள்ள முருகன்  அறையில் இருந்து ஆண்ட்ராய்டு  செல்போன் 2 சிம்கார்டு, ஒரு  ஹெட்செட் ஆகியவை கைப்பற்றப் பட்டன. இதுதொடர்பாக முருகன் மீது பாகாயம் காவலர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதை தொடர்ந்து அவருக்கு சிறையில் வழங்கப்படும் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பெண்கள்  சிறையில் உள்ள நளினி முன் கூட்டியே விடுதலை செய்யக்கோரி உண்ணாநிலைப்போராட்டத்தில் ஈடுபடபோவதாக சிறை அதிகாரி களிடம் மனு கொடுத்தார். இதனை  அடுத்து, காலை உணவை சாப்பிட வில்லை. அவர் சாகும் வரை உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள் ளார் என சிறை அதிகாரிகள் கூறினர்.