சென்னை,மார்ச் 6- சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ள திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகனின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் மு.க.ஸ்டாலின் விசாரித்தார். அவருடன் துரைமுருகன், டி. ஆர்.பாலு, எ.வ.வேலு, ஆ. ராசா ஆகியோர் உடன் சென்றிருந்தனர். 97 வயதாகும் அன்பழ கன் வயது முதிர்வு காரண மாக கடந்த மாதம் வரை வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனும திக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வரு கின்றனர். இதில் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை. இதனால் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவர் தெரி வித்தனர்.