tamilnadu

img

கருணாநிதி 96-வது பிறந்த நாள் விழா

சென்னை, ஜுன் 3-மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 96-வது பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது உருவப் படத்திற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து கட்சியின் மூத்தநிர்வாகிகளான துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டி யன் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு மற்றும் கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தி னர்.இதனைத் தொடர்ந்து மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகி கள் மரியாதை செலுத்தினர். அண்ணா அறிவாலயத்தில் உள்ளமுன்னாள் முதல்வர் கருணாநிதி படத் திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார். பின்னர் திமுக மக்களவை மற்றும் பேரவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுக மாவட்டசெயலாளர்கள் கூட்டமும் நடை பெற்றது. இதனைத் தொடர்ந்து சென்னை நந்தனத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் வாக்காளர் களுக்கு நன்றி தெரிவிக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.