திருத்தணி, ஏப்.29- திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஊராட்சி ஒன்றி யம் வீரகநல்லூர் ஊராட்சி இஸ்லாம் நகரில் வசிக்கும் 59 நபர்கள் கேரளாவில் கத்தி சாணை வேலை செய்து வந்த னர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊர டங்கு உத்திரவு பிறப்பிக்கப் பட்டதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் வீடு திரும்பினர். இதனையடுத்து, அனைவ ரும் 28 நாட்கள் தனிமைப்ப டுத்தப்பட்டு இஸ்லாம் நகர் சுற்றிலும் எல்லைகள் மூடப் பட்டு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன.
இஸ்லாம் நகர் கிராம மக்கள் யாரும் வெளியே செல்லாமலிருக்கவும் வெளி நபர்கள் உள்ளே வராம லிருக்க வருவாய், உள்ளாட் சித், காவல் துறையினர் மூன்று குழுக்களாக இரவும் பகலாக கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டு வந்தனர். மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க ஊராட்சி மன்றத் தலைவர் சி.காதர் பாஷாவும் கண்கா ணிப்பு மற்றும் சுகாதார பணி களை மேற்கொண்டார். வீரகநல்லூர் ஊராட்சி முழுவதும் கிருமிநாசினி, பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணியையும் முடுக்கி விட்டு மருத்துவர்கள், செவிலியர் கள் முகாமிட்டு மக்களுக்கு மருத்துவப் பணிகளை மேற் கொண்டனர். தூய்மைக் காவலர்கள் ஊராட்சி முழு வதும் தூய்மை செய்யும் பணி யினை சிறப்பாக செய்தனர்.
இதனையடுத்து தனி மைப்படுத்தப்பட்டவர்க ளுக்கு 28 நாட்கள் முடிந்த தைத் தொடர்ந்து மருத்துவக் குழுவினர் இஸ்லாம் நகர் முழுவதும் வீடு வீடாகச் சென்று கொரோனா வைரஸ் பரிசோதனை மேற் கொண்டனர். அதில் யாருக் கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதி யானதால் ஊராட்சி மன்றத் தலைவர் கேட்டுக் கொண்ட தின் பேரில் திருத்தணி கோட்டாட்சியர் சொர்ணம் அமுதா உத்தரவின் படி இஸ்லாம் நகர் சுற்றிலும் மூடப்பட்ட எல்லைகள் மற்றும் சோதனைச் சாவடி கள் அகற்றப்பட்டன.இத னால் இஸ்லாம் நகர் கிராம மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.