tamilnadu

img

ஆயுள் பாதுகாப்புடன் பணம் பெருக எல்.ஐ.சி.யில் 2 புதிய பாலிசி அறிமுகம்

தென் மண்டல மேலாளர் கே.கதிரேசன் தகவல்

சென்னை, மார்ச் 2 இந்திய ஆயுள் காப்பீட்டு  நிறுவனம், ‘நிவேஷ் பிளஸ்’, ‘எஸ்ஐஐபி’ ஆகிய 2 யூலிப் திட்டங்களை அறிமுகப் படுத்தியுள்ளது. இப்பாலிசிகளை சென்னையில் எல்.ஐ.சி தென் பிராந்திய மேலாளர் கே.கதிரேசன்வெளியிட்டார். இந்திய ஆயுள் காப்பீட்டு நிறு வனமான எல்.ஐ.சி, பங்குச் சந்தை யுடன் இணைந்த புதிய இரண்டு யூலிப் பாலிசிகளை அறிமுகப்படுத்தி உள் ளது. இதன்படி, ‘நிவேஷ் பிளஸ்’ என்ற திட்டத்தில் சிங்கிள் பிரிமியம் என்ற அடிப்படையில் பிரிமியம் செலுத்த வேண்டும். குறைந்த பட்ச பிரிமிய மாக ஒரு லட்சம் ரூபாயும், அதிகபட்ச மாக எவ்வளவு தொகை வேண்டுமானா லும் செலுத்தலாம்.

இதேபோல், ‘எல்ஐசி எஸ்ஐஐபி’  என்ற திட்டம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இத்திட்டத்தில் பிரிமி யத்தை மாதம்தோறும் செலுத்த லாம். இத்திட்டத்தில், ஆண் டொன்றுக்கு குறைந்த பட்ச பிரிமிய மாக ரூ.40 ஆயிரமும், அதிகபட்ச மாக எவ்வளவு தொகை வேண்டு மானாலும் செலுத்தலாம். இந்த இரு  திட்டங்களிலும், சேர்ந்த 5 ஆண்டு களுக்குப் பிறகு நிபந்தனைக்கு உட்பட்டு ஒரு குறிப்பிட்ட தொகையை திரும்ப எடுக்கலாம். எல்ஐசி நிறு வனத்தின் தென்மண்டல மேலாளர் கதிரேசன் இந்த இரு திட்டங்களையும் அறிமுகப்படுத்தினார்.

இந்த இரு பாலிசிகளும் திங்க ளன்று (பிப்.2) முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த 2 திட்டங்களிலும் ஆயுள் பாதுகாப்புடன் யூனிட் திட்டங் களில் முதலீடு செய்து பலன் பெற உதவு கிறது. ஒரு தடவை பிரிமியம் செலுத்து வதை தேர்வு செய்யலாம். ஒரு தடவை செலுத்தும் பிரிமியம் தொகையினை 10 மடங்குகளில் இன்சூரன்ஸ் செய்யலாம். குறைந்த பட்ச பிரிமியம் தொகை ரூ.1 லட்சம் ஆகும். அதன் மடங்கில் எவ் வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.

2வது திட்டம்

2வது திட்டமான ‘எல்ஐசி எஸ்ஐஐபி’ திட்டத்தில் ரெகுலராக பிரி மியத்தை செலுத்தலாம். ஆயுள் காப்பீட்டுடன், யூனிட் முதலீடு வருமா னம் சேர்த்து பலன் கிடைக்கும். இதில் பெறப்படும் தொகை, யூனிட்கள் வாங்க பயன்படுத்தப்படும். 55 வய துக்கு உட்பட்டவர்களுக்கு அடிப்படை இன்சூரன்ஸ் தொகையில் 10 மடங்கும், 55 முதல் அதற்கு மேல் உள்ளவர் களுக்கு 7 மடங்கிலும் பிரிமியம் வசூலிக்கப்படும். 2வது திட்டத்தில் குறைந்தபட்ச பிரி மியம் ரூ.40 ஆயிரம் ஆகும். கூடுதலாக எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். 2 திட்டங்களிலும் 5 ஆண்டு முடிந்தவுடன் சில குறிப்பிட்ட தேவைக்கு பகுதி தொகையை திரும்ப பெறலாம். இந்த திட்டங்களை ஆன்லைனில் www.LICindia.in மூலம் பெறலாம்.