tamilnadu

img

மருத்துவமனையில் அன்பழகன் அனுமதி: மு.க.ஸ்டாலின் நலம் விசாரிப்பு

சென்னை, பிப். 25- தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரி யர் அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரி யர் அன்பழகன் (வயது 97) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரண மாக கட்சி நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் வீட்டில் அவருக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. திங்களன்று இரவு அன்பழகனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை மேற்கொண்டனர். 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திங்களன்று இரவே மருத்துவமனைக்கு நேரில் சென்று உடல்நலம் விசாரித்தார். அன்பழகனின் உடல்நலம் குறித்து டாக்டர்கள் மு.க.ஸ்டாலினிடம் விளக்கிக் கூறினார்கள். அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பலரும்  மருத்துவமனைக்கு சென்று அன்பழக னின் உடல் நலம் குறித்து கேட்டறிந்த னர். செவ்வாயன்று (பிப்.25)  காலையி லும் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்து வமனைக்கு சென்று அன்பழகனின் உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.