tamilnadu

img

இறைச்சிக் கடைகளை மூடாதீர்!

சிறுபான்மை மக்கள் நலக்குழு வலியுறுத்தல்

சென்னை, ஏப். 4- இறைச்சிக் கடைகளை மூடக் கூடாது என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தமிழக அரசை வலியுறுதியுள்ளது. இதுகுறித்து மாநிலத் தலை வர் எஸ்.நூர்முகமது, மாநில பொதுச்செயலாளர் எம்.ராம கிருஷ்ணன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை: மக்கள் கூட்டத்தை காரணம் காட்டி சில மாவட்ட நிர்வாகங்கள் இறைச்சிக் கடைகளை வருகிற 14-ஆம் தேதி வரை மூடுவதாக அறி வித்திருக்கிறது தமிழக அரசு தலை யிட்டு இந்த முடிவை கைவிடச் செய்ய  வேண்டும் என தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு கேட்டுக்கொள்கிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மூன்றாம் நிலைக்கு  செல்லாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கி றது. தமிழக அரசு அதற்காக உறுதி யான சில நடவடிக்கைகளை எடுத்  துக் கொண்டிருப்பதையும் பெரும் பான்மை மக்கள் அதற்கு ஆதரவாக செயல்படுவதையும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வர வேற்கிறது, பாராட்டுகிறது. ஆனால் அதே நேரத்தில் இதை  காரணம் காட்டி  சில ஒவ்வாத  நிகழ்ச்சிகளும் நடந்து கொண்டி ருக்கிறது. தமிழகத்தில் சில மாவட்ட நிர்வாகங்கள் இறைச்சிக் கடை நடத்துகிற  அமைப்புகளை அழைத்து இறைச்சி கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். பல மாவட்டங்களில் ஏப்ரல்  14ஆம் தேதி வரை இறைச்சி கடை களை மூடுவதற்கான உத்தரவுகளை மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்தி ருக்கின்றன.

இறைச்சி சாப்பிடுவது இந்த  நோய்த் தொற்றுக்கு காரணமென் றால் அதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் தமிழகத்தில் சில சக்தி கள் இறைச்சி போன்றவை உண்ப தால் தான் கொரோனா நோய்த்  தொற்று பரவுவதாக சில தவறான  பிரச்சாரங்களை செய்து வருகி றார்கள். இதற்கு பின்னால் மிகப் பெரிய சதி அடங்கியிருக்கிறது. திட்ட மிட்டு தமிழக மக்களை இறைச்சி  உண்பதிலிருந்து விலக்கி வைப்ப தற்கான முயற்சியாக இந்த நடை முறைகள் உள்ளதாக ஒரு அச்சம் நிலவுகிறது. புரதசத்து மிகுந்த இறைச்சி பொருட்கள்  நோய் எதிர்ப்பு  சக்தியை மேம்படுத்தும் வல்லமை  கொண்டது. எந்த ஒரு நோய் தொற் றுக்கும் அதை எதிர்கொள்வதற்கான எதிர்ப்பு சக்திதான் ஒவ்வொரு மனிதனுடைய ஆதாரம். கொரோனா வைரசும் இன்றைக்கு இந்த அடிப்படையில்தான் உலகம் முழுவதும் எதிர் கொள்ளப்படுகிறது. நோய் தொற்றுக்குள்ளானவர்கள் வெற்றிகரமாக அதிலிருந்து விடு படுவதற்கு நோய் எதிர்ப்பு சக்தியே ஆதாரம்  இந்த விஞ்ஞானத்தை மறுக்கிற விதமாக இறைச்சிக் கடை களை மூடும் உத்தரவுகள் அமை கின்றன. அத்தோடு மக்களின் உணவு  உரிமையை கேள்விக்குறியாக்கு வதாகவும் உள்ளது. எனவே தமிழ கத்தில் இருக்கிற பெரும்பான்மை யான, சாதாரண மக்களின் அடிப்ப டையான நோய் எதிர்ப்பு ஆதார மாக பருப்பு வகைகளோடு இறைச்சி  தான் பிரதானமாக இருக்கிறது. இதை  அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதேநேரத்தில் இறைச்சிக் கடை யின் முன்னால் மக்கள் கூடுவதை ஒழுங்குபடுத்துவதற்கு தனிமனித இடைவெளியை உறுதி செய்வ தற்கு, கடைகாரர்களையும், நிர்வா கத்தையும் கட்டாயப்படுத்தி அமல்ப டுத்த வேண்டும். இன்றைக்கு பல சரக்கு, காய்கறி உட்பட கடைகளில்  இந்த முறைதான் தமிழகத்தில் நடை முறையில் இருக்கிறது. இந்த நடை முறையை இறைச்சி கடைகளுக்கு உட்படுத்தி தமிழகத்தில் பெரும் பான்மையான மக்களின் உணவு ஆதாரமாக இருக்கிற, நோய் எதிர்ப்பு  சக்திக்கு ஆதாரமாக இருக்கிற இறைச்சி கடைகளை திறந்து நடத்து வதற்கு தமிழக அரசு நேரடியாக தலையிட்டு உத்தரவிட வேண்டு மென தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

;