tamilnadu

img

திமுக தலைமையில் நாளை அனைத்து கட்சி கூட்டம்

சென்னை, ஏப். 13- உலகையே அச்சுறுத்திக் கொண்டு வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள்  அதிகரித்துக் கொண்டே வருகிறது. மத்திய மாநில அரசு கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல்  14 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த உத்தரவு மேலும்  நீட்டிக்கப்படும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால் மத்திய-மாநில அரசுகள் இதுகுறித்த அறி விப்பை இன்னமும் வெளியிடாமல் மவுனம் காத்து வருகிறது. ஏற்கனவே போடப்பட்ட தடை உத்தரவால் சாதாரண ஏழை எளிய கூலித் தொழிலாளர்கள் முதல் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில், அனைத்து கட்சி கூட்  டத்தை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவரின்  வேண்டுகோளை முதலமைச்சர் நிராகரித்து விட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்  செயலாளர் கே. பாலகிருஷ் ணன் உள்ளிட்ட பலரும் இதே  போன்று முதமைச் சருக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனா லும் முதலமைச்சர் தரப்பில் எந்த அசைவும் இல்லை. எனவே, மத்திய, மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து  கூட்டணிக் கட்சிகள் தலைவர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏப்.15 ஆம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

;