2002-இல் தீக்கதிர் தில்லி செய்தி யாளராக வந்தேன். தோழர்கள் பி.மோகன், ஏ.வி.பெல்லார்மின் ஆகிய கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர்களோடு, என்னையும் சேர்த்து ஒரே இடத்தில் தங்கி பணிகளைச் செய்திடுமாறு கட்சி கட்டளையிட்ட போது, இவர்களோடு தோழர் கே.வரத ராசன் அவர்களுக்கும் சேர்த்துத்தான் என் பணிகள் இருந்தன. நான் வரும்போது தோழர் கே.வி. மத்தியக் குழு உறுப்பினர். பின்னர் நடை பெற்ற அகில இந்திய மாநாட்டில் அரசி யல் தலைமைக்குழுவிற்கு உயர்ந்தார். அடுத்து இரு மாநாடுகளில் தொடர்ந்து அரசியல் தலைமைக் குழுவில் இடம் பெற்றார்.
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராக இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். தீக்கதிர் இதழோடு தன்னை மிகவும் நெருக்க மாகப் பிணைத்துக் கொண்டிருந்தவர்க ளில், தோழர் கே.வி.யும் ஒருவர். தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி உருவாவதில் தோழர் கே.வி.யின் பங்களிப்புக் கணிசமானதாகும். தோழர் கே.வி. அகில இந்திய விவ சாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாள ராக இருந்த சமயத்தில் மகாராஷ்டிர மாநிலம், கோதாவரி நதிக்கரையில் நாசிக்கில் நடைபெற்ற மாநாடு, ஆந்திரா வில் குண்டூரில் நடைபெற்ற மாநாடுக ளுக்கு தீக்கதிர் செய்தியாளராக மட்டு மல்ல, அகில இந்திய விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளரின் உதவியா ளராகவும் சென்றிருந்தேன்.
தோழர் கே.வி.யும் நானும் இணைந்து செயல்பட்டபோதெல்லாம், அநேகமாக தீக்கதிருக்கு வாரத்தில் ஓரிரு கட்டுரை கள் உருவாகிவிடும். தீண்டாமை சாதிய ஒடுக்குமுறை ஒழிய வேண்டும் என்பதில் உளப்பூர்வ மாக செயல்பட்ட தோழர்களில் கே.வி.யும் ஒருவர். தில்லியில் அவர் இருந்தகாலத்தில் என்னுடைய சொந்த நலனிலும் மிகவும் அக்கறையுடன் கவனத்தைச் செலுத்திய வர்
கட்சி, என்ன கட்டளையிட்டாலும், அதை எப்படியாவது காலத்தில் முடித் துக்கொடுக்க வேண்டும் என்பதில் கண்ணுங்கருத்துமாகச் செயல்படுவார். தோழர் கே.வி.யின் மறைவு என்னைப் பொறுத்தவரை மாபெரும் இழப்பாகும். தோழர் பிரகாஷ்காரத் ஒருசில தோழர்களைப்பற்றிக் குறிப்பிடுகையில் முன்னுதாரணமான வாழ்க்கை முறை என்று குறிப்பிடுவார். அதேபோல் தமிழ்நாட்டில் தோழர் ஜே.ஹேமச்சந்தி ரன், தோழர் கோ.வீரய்யன், மேற்கு வங்கத்தில் முகமது அமீன் போன்று நிறைய தோழர்கள் இருந்தார்கள். அவர்களின் வரிசையில் வைக்கப்பட வேண்டியவர் தோழர் கே.வி. அப்பழுக் கற்ற தோழர். ஆடம்பரமேயில்லாத அன்புத் தோழர். அவரது மறைவு நெஞ்சை உலுக்குகிறது.
ச.வீரமணி,
தீக்கதிர் தில்லி செய்தியாளர்