tamilnadu

img

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர் மரணம்

ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்குக

தீ.ஒ.முன்னணி, சிஐடியு கோரிக்கை

ஈரோடு, மே 11- ஈரோடு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவு பணியாளர் மரண மடைந்துள்ள நிலையில் அவரது குடும்பத் தாருக்கு ரூ.50 லட்சம் நிவாரணமாக வழங்க  வேண்டுமென தமிழக முதல்வருக்கு தீ.ஒ. முன்னணி, சிஐடியு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சிஐடியு ஈரோடு மாவட்டக் குழு மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி  சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பி யுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள் ளதாவது: உலகையே அச்சுறுத்தி வரும்  கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்ப டுத்தி மனித சமூகத்தைப் பாதுகாக்க ஒருங்கி ணைந்து போராடி வருகிறோம். நமது  நாட்டிலும் மார்ச் 24 ஆம் தேதி முதல் சமூக  ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளோம். இந்த சூழலி லும் நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் தன்னலம் மறந்து, அர்ப்பணிப் போடு மருத்துவத்துறை, காவல் துறை, பொது சுகாதாரம் ஆகிய துறைகளைச் சார்ந்த ஊழியர்கள் பணியாற்றி வருகிறார் கள். இதிலும் மக்கள் வாழிடங்களில் குப்பை கள் தேங்காமல், அசுத்தம் ஏற்படாமல் அன்றாடம் தங்களை வருத்திக் கொண்டு பணியாற்றுபவர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் வேலை செய்கிற தூய்மைப் பணியாளர்களும் ஆவர். 

ஈரோடு மாவட்டம் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் பணி யாற்றும் தூய்மைப் பணியாளர்களில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்கள் அல்ல. தினக்கூலிகளாகப் பணியாற்றுபவர்கள் ஆவர். அப்படிப்பட்ட தினக்கூலி தொழிலா ளியாக 15 ஆண்டுகளாக நெரிஞ்சிப் பேட்டை பேரூராட்சியில் வேலை செய்து  வந்தவர் பாலன் (எ) என்.பாலசுப்பி ரமணியன். இவர் கடந்த புதனன்று (மே 6) காலை 6 மணியளவில் நெரிஞ்சிப்பேட்டை மெயின்ரோட்டில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயக்கம டைந்துள்ளார். இதையடுத்து அவருடன் பணியாற்றியவர்கள் உடனடியாக அம்மா பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

கொரோனா பரவல் தடுப்பு பணியில், தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இவர் பணி நேரத்தில் இறந்துள்ளார். ஆனால், அவரது இறப்பு பதிவு செய்யப் படவில்லை. அவர் இறப்பிற்கான கார ணமும் பரிசோதிக்கப்படவில்லை. மேலும் இறந்த பின்னர் அவரது சடலத்தை அதே குப்பை வண்டியில் வைத்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். இவ்வாறான செயல் மனித உரிமை மீறல் மட்டுமல்ல. தீண் டாமை கொடுமையின் வடிவமாகும். எனவே, இதுகுறித்து தலையிட்டு பேரூராட்சி நிர்வாகத்தின் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். 

மேலும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறை, மருத்து வத்துறை, வருவாய்த்துறை, சுகாதாரப் பணியாளர்கள் இறக்க நேரிட்டால் ரூ.50 லட்சம் காப்பீடு செய்து நிவாரணமாகக் கொடுக்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என  தமிழக  அறிவித்துள்ளது. அதன்படி, நெரிஞ்சிப் பேட்டை பேரூராட்சியின் தூய்மைப்  பணியாளர் பாலன் (எ) பாலசுப்பிரமணியன் குடும்பத்தாருக்கு அந்நிவாரணங்கள் வழங்க வேண்டும் என அம்மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதற்கிடையே, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஈரோடு மாவட்ட செய லாளர் பி.பழனிசாமி, சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன், சிபிஎம் பவானி தாலுகா செயலாளர் ஏ.ஜெகநாதன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பவானி தாலுகா செயலாளர் எஸ்.மாணிக்கம், துப்புரவு பணியாளர் சங்கத்தின் மாவட்ட பொது செயலாளர் எஸ்.மாணிக்கம் மற்றும் எஸ்.ஜெகநாதன், ஜோதிமுத்து, ஆர்.நடராஜன் ஆகியோர் சனியன்று நெரிஞ்சிப்பேட்டை அரிசன காலனியில் உள்ள பாலன் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரி வித்தனர்.

;