tamilnadu

img

தலித் கிறிஸ்தவப் பெண்ணைக் காதலித்த தலித் இளைஞர் எரித்துக் கொலை

இராமநாதபுரம்:
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடா னையில் தலித் கிறிஸ்தவ பெண்ணைக் காதலித்த தலித் இளைஞர் சதீஷ்குமார் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் திருவாடா னை தாலுகா தொண்டியை அடுத்துள்ள முகிழ்த்தகம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது மகன் அஜீத்குமார் (22) தண்ணீர் லாரியில் ஓட்டுநராகப் பணியாற்றியுள்ளார்.

இவர், திருப்பாலைக்குடியைச் சேர்ந்த தலித் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த ஜான்பீட்டர் மகள் ரஞ்சனியை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை ரஞ்சனியின் தந்தை கண்டித்ததாகக் கூறப்படு கின்றது. இந்த நிலையில், சனிக்கிழமை காலைவேலைக்குச்  சென்ற அஜீத்குமார்வீடு திரும்பவில்லை, அவரது செல்போன்அணைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தொண்டி காவல்நிலையத்தில் புகார் செய்தனர்.இந்த நிலையில், ஞாயிறன்று தொண்டிஅருகே உள்ள நம்புதாளை வனப்பகுதியில் அஜீத்குமார் இரு கைகளும் கட்டப்பட்டு கழுத்து அறுக்கப்பட்டு எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். அவரது உடல் மீட்கப்பட்டு உடற்கூறாய்விற்காக இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு வரப்பட்டது. 

ஆர்ப்பாட்டம் - மறியல்
இந்தக் கொலையில் தொடர்புடை யவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்,பாதிக்கப்பட்ட அஜீத்குமார் குடும்பத்திற்குஉரிய நிவாரணம்,  அரசுப்பணி வழங்க வேண்டும். உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்திஉறவினர்கள், தமிழ்நாடு தீண்டாமைஒழிப்பு முன்னணியினர் அஜீத்குமார் உடலைவாங்க மறுத்து மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள்யாரும் பேச்சுவார்த்தைக்கு முன்வராத நிலையில் சாலை மறியல் நடைபெற்றது.இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்புமுன்னணி மாநிலத் துணைப்பொதுச்செயலாளர் செல்லக்கண்ணு, மாநிலச்செயலாளர் எம்.கந்தசாமி, மாவட்டதுணைத்தலைவர் வான்தமிழ், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் இ.கண்ணகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், ஆதிரத்தினம் மற்றும் கிராமத்தினர் கலந்துகொண்டனர்.

;