tamilnadu

img

ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதிய கூட்டம்

சென்னை,அக்.26- தீபாவளி பண்டிகைக் காக சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் வசிக்கும் வெளியூர் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பய ணம் செய்கின்றனர். சொந்த  ஊர்களுக்கு செல்ல வசதி யாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு  பேருந்துகள் இயக்கப்படு கின்றன. சென்னையிலிருந்து பொதுமக்கள் வெளியூர்க ளுக்கு செல்ல பெருங்க ளத்தூர், கூடுவாஞ்சேரி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காவ லர்களும் போக்குவரத்து துறை அதிகாரிகளையும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சென்னை- திருச்சி  வரையிலான தேசிய நெடுஞ்  சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் பேருந்துகள் எவ்வித தாமதமின்றி செல்கின்ற வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

கடந்த 2 நாட்களை விட சனிக்கிழமையன்று(அக்.26) பயணிகள் கூட்டம் அதிக மானது. தனியார் நிறுவ னங்களில் பணியாற்றக் கூடி யவர்கள், சொந்த தொழில் செய்யக் கூடியவர்கள், கூலி தொழிலாளர்கள் அதிகளவு கடைசி நேர பயணத்தை மேற்கொள்வார்கள் 1,510 சிறப்பு பேருந்துகள் உள்பட  3,735 பேருந்துகள் சனிக்  கிழமை மட்டும் இயக்கப் பட்டன. அரசு பேருந்துகளை தவிர ஆம்னி பேருந்து நிலையத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்க ளில் நீண்ட தூரம் செல்லக் கூடிய ரயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வழக்கமாக இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களுடன் 7 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் இடம் பிடிக்க மக்கள் போட்டி போட்டனர். குழந்தைகளுடன் குடும்ப மாக ரயிலில் பயணம் செய்ய  வரிசையிலும் காத்து நின்ற னர். பகல் நேர ரயில்களில்  கூட்டம் நிரம்பி காணப் பட்டது. கோவை, பெங்க ளூர், மைசூர், மதுரை, திருச்சி  போன்ற பகல் நேர எக்ஸ்பி ரஸ் ரெயில்களில் மக்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர். சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை ஒரு நாள்  மட்டும் அரசு பேருந்து, ஆம்னி பேருந்து மற்றும்  ரயில்கள் மூலம் சுமார் 6  லட்சம் பேர் பயணம் செய் துள்ளனர். சனிக்கிழமை அதைவிட கூடுதலாக பய ணித்தனர்.

;