திருச்சி, ஆக.18- திருச்சி அருகே ஞாயி றன்று பிற்பகல் நிகழ்ந்த விபத் தில் 8 பேர் பலியானார்கள். ஐந்து பேர் திருச்சிராப்பள்ளி, துறையூர் மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். திருச்சி மாவட்டம் முசிறி யை அடுத்துள்ள பேரூர் கிரா மத்தைச் சேர்ந்த சுமார் 20 பேர் எஸ்.என்.புதூர் கிராமத்தில் நடைபெறும் அங்காயி அம் மன் கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக டாடா ஏஸ் சரக்கு வாகனத்தில் சென்றுள் ளனர். வாகனத்தை இளைய ராஜா என்பவர் ஓட்டியுள்ளார். திருமானூர் - எறக்குடி சாலை யில் வாகனம் சென்று கொண் டிருந்தபோது, எறக்குடி அருகே வாகனத்தின் டயர் வெடித்து அருகில் இருந்த பாழடைந்த 80 அடி ஆழ முள்ள கிணற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கோமதி, கயல்விழி, குமாரத்தி, குண சீலன், எழிலரசி, யமுனா, சரண்குமார், சஞ்சனா ஆகி யோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்தில் காயமடைந்த சரஸ்வதி(46), யோசிகா (13), சுகந்தன்(12) ஆகியோர் திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவமனையிலும், மற்றொருவர் துறையூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்ற னர். தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியர் சிவராசு, காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் ஆகியோர் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்ட னர். விசாரணை நடைபெற்று வருகிறது.