tamilnadu

img

இந்நாள் அக்டோபர் 16 இதற்கு முன்னால்

1905 - ஆங்கிலேய அரசின் இந்தியத் தலைமை ஆளுனர் கர்சான் 1905 ஜூலை 19இல் அறிவித்த வங்கப் பிரிவினை செயல்படுத்தப்பட்டது. ஒன்றுபட்ட வங்கம், தற்போதைய சட்டீஸ்கர் மாநிலத்தின் சில பகுதிகள், பிகார், அசாம், ஒரிசா ஆகியவை அடங்கிய அந்நாளின் வங்காள மாநிலம், சுமார் 7.85 கோடி மக்கள்தொகையுடன், ஆங்கில அரசின் மாநிலங்களிலேயே மிகப்பெரியதாக இருந்தது. இதை நிர்வகிப்பது சிரமமாக இருப்பதாக, காலங்காலமாக ஆங்கிலேய அலுவலர்கள் குற்றம் சாட்டிக்கொண்டிருந்தனர் என்பதுடன், தொலைவில் அமைந்திருந்ததும், ஏழைகள் நிறைந்ததுமான கிழக்குப் பகுதியை முறையாக நிர்வகிக்க முடியாத நிலையில்தான், இரண்டாகப் பிரிப்பது நிர்வகிக்க உதவியாக இருக்கும் என்று முடிவெடுக்கப்பட்டது. டாக்கா உள்ளிட்ட சில பகுதிகள் வங்கத்திலிருந்து பிரிக்கப்பட்டு, கிழக்கு வங்கமும் அசாமும் என்ற புதிய மாநிலமாக உருவாக்கப்பட்டன.

இந்தி பேசும் சில பகுதிகள் மத்திய மாநிலங்களுடன் இணைக்கப்பட்டன. சம்பல்பூர், ஒரியா பேசும் பகுதிகள் ஆகியவை மத்திய மாநிலங்களிலிருந்து பிரிக்கப்பட்டு, மேற்கு வங்கத்துடன் இணைக்கப்பட்டன. மேற்கு வங்கத்தில் 4.2 கோடி இந்துக்களும், 1.2 கோடி இஸ்லாமியர்களும், கிழக்கு வங்கத்தில் 1.8 கோடி இஸ்லாமியர்களும், 1.3 கோடி இந்துக்களும் இருந்தனர். அதாவது, இந்து, முஸ்லிம்கள் என்று பிரிப்பது ஆங்கிலேயர்களின் நோக்கமாக இல்லை. உண்மையில், கிழக்குப் பகுதியில் ஏழைகள் என்று மேலே குறிப்பிடப்பட்டவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்களாக இருந்த நிலையில், தங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்று அவர்கள் பிரிவினையை வரவேற்றனர்.

(ஒடுக்கப்பட்டும், ஏழ்மையிலும் இருந்தவர்கள்தான் விடிவுதேடி பிற மதங்களை நாடினர் என்பதுதான் வரலாறு!) ஆனால், பொருளாதார அடிப்படையில் மேலே இருந்தவர்களே(இந்துக்கள்), இதை மத அடிப்படை யிலான பிரிவினை என்று எதிர்த்தனர். அத்துடன் இம்முடிவை அப்போதைய காங்கிரஸ் தலைமை உறுதியாக எதிர்க்கவில்லை என்று கருதியதால், மிதவாதிகள், தீவிரவாதிகள் முரண்பாடுகளும் அதிகரித்து, நாக்பூரில் நடைபெறவிருந்த 1907 மாநாட்டை சூரத்துக்கு மாற்றவேண்டி யதாயிற்று. ஆங்கிலேயர்களுக்கு மத அடிப்படையில் பிரிப்பது நோக்கமாக இல்லாததால், எதிர்ப்புக்குப் பணிந்து, 1911இல் பழைய நிலைக்கே மாற்றியமைத்தனர். ஆனால், தங்களுக்கு நன்மை என்று இஸ்லாமியர்கள் கருதியதை, போராடி தடுத்து நிறுத்தியது, இஸ்லாமியர்களுக்குத் தனிநாடு தேவை என்ற உணர்வு பரவவும், விடுதலையின்போது பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவாகவும் காரணமாக அமைந்தது.

;