tamilnadu

img

ஹூண்டாய்  நிறுவனத்தின் சேல்ஸ் மேனாக மாறிய தெருநாய் 

ஹூண்டாய் நிறுவனத்தில் தெருநாய் ஒன்றுக்கு சேல்ஸ்மேன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
பிரேசில் நாட்டின் எஸ்பிரிட்டோ சேண்டா மாகாணத்தில் செர்ரா  பகுதியில் ஹூண்டாய் நிறுவனத்தின் ஷோ ரூம் உள்ளது. அப்பகுதியில் இருந்த தெருநாய் ஹூண்டாய் பணியாளர்களிடம் நெருங்கி பழக ஆரம்பித்தது. இதனையடுத்து அந்த தெருநாயை ஹூண்டாய் நிறுவனம் தத்தெடுத்தது. அதற்கு டக்சன் பிரைம் என்றும் பெயரிடப்பட்டது. 
இந்த நிலையில், டக்சன் நாய்க்கு 'சேல்ஸ் மேன்' என்ற பொறுப்பையும் வழங்கி, அதற்கான ஐடி கார்டையும் வழங்கினர். டக்சன், சேல்ஸ் மேன் ஐடி கார்டை அணிந்தபடி நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்து போஸ் கொடுத்துள்ளது.  இந்த போட்டோ வெளிவந்த சில மணி நேரங்களிலேயே 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்களைப் பெற்றன.
மேலும், டக்சனுக்காக பிரத்யேகமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் தொடங்கப்பட்டுள்ளது. அதில் டக்சன் செய்யும் சேட்டைகள் அனைத்தும் பதிவிட்டு வருகின்றன. குறிப்பாக வாடிக்கையாளர்களை வரவேற்ப்பது, மீட்டிங்கில் கலந்து கொள்வது, ஊழியர்களுடன் சகஜமாக பழகுவது என அனைத்து போட்டோக்களும் பதிவிடப்பட்டு வருகின்றன. இந்த இன்ஸ்டாகிராம் கணக்கை 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

;